'சட்டசபை தேர்தலில் எப்படியும் வெற்றி நமக்கு தான்'
என, தி.மு.க., தலைமை நம்புகிறது. நடிகர் ரஜினிகாந்தும், கட்சி துவங்கி,
தேர்தலில் போட்டியிட உள்ளார். 'இது, தி.மு.க., வெற்றியைப் பாதிக்குமா' என,
பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், தி.மு.க.,வின் தேர்தல்
வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர், தனக்கு நெருக்கமானவர்களிடம் சொன்ன ஒரு
விஷயம், டில்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
'தமிழகத்திலுள்ள அரசியல் சூழ்நிலையில், தி.மு.க.,வுக்குத் தான், வெற்றி என,
நினைத்தேன்; ஆனால் ரஜினி வரவிற்கு பின், நிலைமை மாறிவிட்டது. அவரது
கட்சியால், தி.மு.க.,வுக்கு அதிக பாதிப்பு வரும்; பெரும்பான்மை கிடைப்பது
சந்தேகம் தான்' எனக் கூறியுள்ளார், பிரசாந்த் கிஷோர்.
'மேற்கு வங்கத்தில்,
மம்தா பானர்ஜியின் உறவினர் அபிஷேக் பானர்ஜி வாயிலாகத் தான், அந்த கட்சிப்
பணிகளுக்குள் மூக்கை நுழைத்தார் பிரசாந்த் கிஷோர். தி.மு.க.,வுக்குள்ளும்,
தலைமையின் உறவினர்கள் வாயிலாக, கட்சி பணிகளில் தலையிட்டு குழப்பத்தை
ஏற்படுத்துகிறார்' என்கின்றார், தி.மு.க., - எம்.பி., ஒருவர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE