பொது செய்தி

தமிழ்நாடு

அபாயகரமான வளைவுகளில்

Added : டிச 27, 2020
Share
Advertisement
வாரணவாசி : வாலாஜாபாத் - ஒரகடம் சாலை விரிவாக்கத்தில், அபாயகரமான வளைவுகளில், தரைப்பாலம் விரிவுபடுத்தும் பணி துவங்கி உள்ளது .வாலாஜாபாத் - ஒரகடம் நான்குவழி சாலை, ஆறுவழியாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது. இந்த பணி, வாலாஜாபாத், ஊத்துக்காடு, நத்தாநல்லுார், நல்லுார், குண்ணவாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் நிறைவடைந்துள்ளது.இதில், வாரணவாசி, தேவரியம்பாக்கம் உள்ளிட்ட சில

வாரணவாசி : வாலாஜாபாத் - ஒரகடம் சாலை விரிவாக்கத்தில், அபாயகரமான வளைவுகளில், தரைப்பாலம் விரிவுபடுத்தும் பணி துவங்கி உள்ளது

.வாலாஜாபாத் - ஒரகடம் நான்குவழி சாலை, ஆறுவழியாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது. இந்த பணி, வாலாஜாபாத், ஊத்துக்காடு, நத்தாநல்லுார், நல்லுார், குண்ணவாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் நிறைவடைந்துள்ளது.இதில், வாரணவாசி, தேவரியம்பாக்கம் உள்ளிட்ட சில வளைவுகளில், சாலை விரிவுபடுத்தும் பணிகளை துவக்கவில்லை. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் பலர், விபத்தில் சிக்கி இறக்கவும் நேரிட்டுள்ளதாக, வாகன ஓட்டிகள் இடையே புகார் எழுந்தது.

இதையடுத்து, தேவரியம்பாக்கம், தழையம்பட்டு உள்ளிட்ட பல அபாயகரமான வளைவுகளில், மழை நீர் வெளியேறும் கால்வாயில், விரிவுபடுத்தும் பணியை, நெடுஞ்சாலைத் துறையினர் தீவிரமாக செய்து வருகின்றனர்.இப்பணிகள் நிறைவு பெற்றால், சாலை குறுகிய வளைவுகளின், பல விபத்து தவிர்க்கப்படும் என, நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X