காஞ்சிபுரம் : தேசிய இளைஞர் விழாவிற்கான மாவட்ட அளவிலான போட்டி தேர்வு, வரும், 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இது குறித்து, மாவட்ட விளையாட்டு ஆணையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள், ஜன., 12 கொண்டாடப்படுகிறது. இந்நாளை, தேசிய இளைஞர் தின விழாவாக கடைப்பிடித்து, அதற்காக, பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில், தனி நபர்களுக்கான, 11 வகையான போட்டிகளும், குழுவினர்போட்டிப் பிரிவில் ஏழு வகையான போட்டிகளும், பாரம்பரிய இசை, நடனம், உடை,அலங்காரம், நாடகம், காட்சிக் கலைகள், எழுத்தாற்றல், பாரம்பரிய விளையாட்டு ஆகிய போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இந்த போட்டியில், 15 முதல் 29 வயதுள்ள பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் மாணவர் இல்லாத ஆண்கள், பெண்கள் பங்கேற்கலாம். மாவட்ட அளவில் வெற்றி பெறுவோர், மாநில அளவில், தேசிய அளவில் பங்கேற்கலாம்.மாவட்ட அளவில், வரும், 29, 30ம் தேதிகள், மாநில அளவில், ஜன., 5 முதல் 8, தேசிய அளவில் ஜன., 12 - 19 வரை போட்டிகள் நடைபெறும். போட்டிக்கான உபகரணங்களை, வீரர்களே தயார் செய்து கொள்ள வேண்டும்.
போட்டிக்கான வீடியோ பதிவுகள், ஒவ்வொரு போட்டிகளுக்கும் ஒதுக்கப்பட்ட நிமிடத்திற்குள் பதிவு செய்து, மாவட்ட விளையாட்டு அலுவலரின் dsokpm@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் அனுப்ப வேண்டும்.மேலும் விபரங்களுக்கு, 7401703481 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE