செங்கல்பட்டு : நென்மேலி லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், 100 ஆண்டுகளுக்கு பின், தெப்ப உற்சவ விழா நடைபெற்றது.
செங்கல்பட்டு அடுத்த, நென்மேலி கிராமத்தில், புகழ்பெற்ற லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான ஜீயர் குளத்தில், 1918ம் ஆண்டு, தெப்ப உற்சவம் நடந்தது. அதன்பின் நடைபெறவில்லை.இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன், குடிமராமத்து திட்டத்தில், ஜீயர் குளம் சீரமைக்கப்பட்டது.சில வாரங்களுக்கு முன் பெய்த, 'நிவர், புரெவி' புயல் மழையால், ஜீயர் குளம், முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து பொது மக்கள் மற்றும் கோவில் நிர்வாகம், தெப்ப உற்சவம் நடத்த முடிவு செய்தனர்.
தொடர்ந்து, 100 ஆண்டுகளுக்கு பின், நேற்று முன்தினம், லட்சுமி நாராயண பெருமாளுக்கு, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சுவாமி வீதியுலா நடத்தப்பட்டது.இரவு, 8:30 மணிக்கு, தெப்பத்தில் சுவாமி எழுந்தருளியதும், உற்சவ விழா நடைபெற்றது.நென்மேலியை சுற்றி உள்ள, கிராம மக்கள் பங்கேற்று, தெப்ப உற்சவத்தில், சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம், பொதுமக்கள் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE