திருத்தணி : கரும்பு ஏற்றி வந்த டிராக்டர், திருத்தணி பை - பாஸ் சாலையில், தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
திருத்தணி ஒன்றியம், கே.ஜி.கண்டிகை பகுதியில் இருந்து, விவசாயி, கரும்புகளை வெட்டி, டிராக்டரில் ஏற்றிக் கொண்டு திருவாலங்காட்டில் இயங்கி வரும் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை நோக்கி நேற்று சென்றுக் கொண்டிருந்தார்.அப்போது கரும்பு டிராக்டர், திருத்தணி பை --- பாஸ் சாலை அருகே, ரயில்வே பாலத்தின் கீழ் உள்ளே நுழைவதற்கு முன், டிராக்டர் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, மாநில நெடுஞ்சாலை தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.இதில், அதிர்ஷ்டவசமாக ஓட்டுனர் காயமின்றி உயிர் தப்பினார்.\
அதே நேரத்தில், விபத்தால் கரும்பு டிராக்டர் சாலையின் குறுக்கே நின்றதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, நான்கு மணி நேரம் கழித்து, டிராக்டரில் இருந்த கரும்பு, மற்றொரு டிராக்டருக்கு மாற்றப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE