எம்.ஜி.ஆர்., நகர் : காதல் விவகாரத்தில், பெண் மருத்துவர் தற்கொலை செய்ய முயன்றது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
கேரள மநிலத்தைச் சேர்ந்த, 27 வயது பெண் மருத்துவர், கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார்.அதே மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வரும் அனுமந்தன், 47, என்பவரை காதலித்தார். இவர், திருமணமாகி விவாகரத்து பெற்றவர். ஊரடங்கிற்கு முன், விடுதியில் தங்கியிருந்த பெண் மருத்துவர், பின், கே.கே.நகர், அண்ணா பிரதான சாலையில் உள்ள அனுமந்தன் வீட்டில், அவருடன் ஒன்றாக வசித்து வந்தார். அனுமந்தனிடம், தன்னை திருமணம் செய்யும் படி கேட்டுள்ளார். அதற்கு, அவர் சற்று அவகாசம் கேட்டுள்ளார்.
இதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, பெண் மருத்துவர் வீட்டில் துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதைக்கண்ட அனுமந்தன், அவரை மீட்டு, இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. எம்.ஜி.ஆர்., நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE