சுஷாந்த் மரணம் கொலையா? தற்கொலையா? சி.பி.ஐ.,யிடம் கேட்கும் மஹா., அரசு

Updated : டிச 27, 2020 | Added : டிச 27, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பதை வெளியிடுமாறு சி.பி.ஐ.,யிடம் மஹாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தினார்.ஜூன் 14-ல் மும்பையின் பாந்த்ராவில் உள்ள தனது குடியிருப்பில் சுஷாந்த் சிங் இறந்து கிடந்தார். அவரது திடீர் மறைவு தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மும்பை காவல்துறையினர் இது

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பதை வெளியிடுமாறு சி.பி.ஐ.,யிடம் மஹாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தினார்.



latest tamil news



ஜூன் 14-ல் மும்பையின் பாந்த்ராவில் உள்ள தனது குடியிருப்பில் சுஷாந்த் சிங் இறந்து கிடந்தார். அவரது திடீர் மறைவு தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மும்பை காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். காதலி ரியா சக்ரபார்த்தி உள்ளிட்டோர் மீது சுஷாந்தின் தந்தை பீகார் போலீஸில் புகார் அளித்தார். இதனால் இரு மாநில போலீஸார் இடையே பிரச்னையாக மாறியது. சுப்ரீம் கோர்ட் இவ்வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றியது.
சுஷாந்திற்கு போதை பொருள் வாங்கி தந்ததாக அவரது காதலி ரியா மற்றும் அவர் சகோதரர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். தற்போது ரியா மற்றும் சகோதரர் ஜாமினில் வெளியே உள்ளனர். இந்த நிலையில் ஞாயிறன்று மஹா., உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் செய்தியாளர்களைச் சந்தித்து, மீண்டும் இவ்வழக்கு பற்றி கேள்வி எழுப்பியுள்ளார்.
“சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கு தொடர்பான சிபிஐ அறிக்கைக்காக மகாராஷ்டிரா மற்றும் நாட்டு மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த வழக்கின் நிலை குறித்து மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். அவரது மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பதை சிபிஐ வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்று கூறினார்.


latest tamil news



கடந்த அக்டோபரில் எய்ம்ஸ் மருத்துவர்கள் சுஷாந்தின் மரணம் குறித்து ஆய்வு செய்தனர். தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவே கூறியுள்ளனர். கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தை நிராகரித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
28-டிச-202008:32:46 IST Report Abuse
Allah Daniel அய்யா மகாராஷ்டிரா அரசு...செஞ்ச நீங்களே கேள்வி கேட்டா என்ன பதில் சொல்ல...இவளவு நாட்களா எல்ல தடையதையும் அழைச்சிட்டு இப்பவந்து கேட்குறீங்க...
Rate this:
Cancel
28-டிச-202001:01:56 IST Report Abuse
ஆப்பு சரியான கேள்வியை தப்பாப ஆட்களிடம் கேட்குறார்கள். ஊரில் உள்ள எல்லா நடிகைகளையும் அரெஸ்ட் பண்ணி கேள்வி கேட்டு ஒரு 30000 பக்கத்துக்கு அறிக்கை குடுப்பாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X