ஆவடி : ஆவடியில், கல்லுாரி மாணவரை ஓட ஓட விரட்டி, அரிவாளால் சரமாரியாக வெட்டிய நான்கு பேரை, போலீசார் தேடி வருகின்றனர்.
ஆவடி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் தயாளன், 20; அரசு கலைக்கல்லுாரியில், பி.ஏ. பொருளாதாரம் படித்து வருகிறார்.இவர், நேற்று மாலை, வீட்டிற்கு அருகே நின்று கொண்டிருந்த போது, நான்கு பேர் கொண்ட கும்பல், அவரை ஓட ஓட விரட்டி, அரிவாளால் வெட்டியது.இதில், தயாளனுக்கு இடது புற கழுத்து மற்றும் இடது கை மணிக்கட்டில் வெட்டு விழுந்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் திரண்டனர்.
அதற்குள், அந்தகும்பல் தப்பியது.உடனடியாக தயாளன் மீட்கப்பட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆவடி போலீசார் விசாரிக்கின்றனர்.பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள குடியிருப்பு பகுதியில், மாணவரை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE