விருகம்பாக்கம் : கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார், 25; சினிமா துணை நடிகர். அவர், வடபழநி, கங்கப்பா தெருவில் உள்ள விடுதியில், 203ம் அறை எண்ணில் வசித்து வந்தார்.
நேற்று காலை முதல், அறையின் கதவு திறக்காததால், சந்தேகமடைந்த விடுதி மேலாளர், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மின்விசிறியில், அஜித்குமார் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பினர். சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில், சொந்த ஊரில், பலரிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால், மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE