மாதவரம் : மறு சீரமைப்புக்காக விடப்பட்ட லாரியின் உதிரி பாகங்களை திருடியோர் மீது, லாரி உரிமையாளர் புகார் அளித்தார்.
திருவொற்றியூர், காலடிப்பேட்டை, எழுத்துக்காரன் தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ், 45. அவர் தனக்கு சொந்தமான, 40 அடி நீள டிரெய்லர் லாரியை பராமரிக்க முடியாமல், மறு சீரமைப்பு செய்ய, மாதவரத்தைச் சேர்ந்த ராஜ் என்பவரிடம் ஒப்படைத்தார்.அதற்காக, அவரிடம், 15 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயித்து, அதில், 3,000 ரூபாயை, முன்பணமாக கொடுத்ததாக கூறப்படுகிறது. பணத்தை பெற்ற ராஜ், லாரியை சீரமைக்க முடியாமல், காலதாமதப்படுத்தினார். இதனால், பிரகாஷ், லாரியை வேறு இடத்தில் சீரமைக்க முடிவு செய்தார்.
அப்போது, தன்னிடம் முன் பணம் வாங்கிய ராஜ் சிபாரிசு செய்த, மஞ்சம்பாக்கம், காமராஜர் சாலை, மாசிலாமணி நகரில் உள்ள மற்றொருவரிடம், தன் லாரியை ஒப்படைத்தார்.ஆனால், நேற்று முன்தினம் வரை, லாரி சீரமைக்கப்படவில்லை. மேலும், லாரியின் பேட்டரி, மோட்டார் என, உதிரி பாகங்களை, மேற்கண்ட இருவரும் சேர்ந்து திருடியதாக, பிரகாஷ், மாதவரம் பால்பண்ணை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE