பொது செய்தி

தமிழ்நாடு

விம்கோ நகர் வரை மெட்ரோ சோதனை ஓட்டம்

Added : டிச 27, 2020
Share
Advertisement
சென்னை : வண்ணாரப்பேட்டை -- திருவொற்றியூர் விம்கோ நகர் இடையே, நேற்று மெட்ரோ ரயில் இயக்கி, சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. சென்னை, வண்ணாரப்பேட்டை -- திருவொற்றியூர் விம்கோ நகர் இடையே, 3,770 கோடி ரூபாய் செலவில், 9.1 கி.மீ.,க்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. பயணியருக்கான அத்தியாவசிய கட்டுமான பணிகளை விரைவாக முடித்து, ஜனவரியில், இப்பாதையில் ரயில் இயக்க அதிகாரிகள்

சென்னை : வண்ணாரப்பேட்டை -- திருவொற்றியூர் விம்கோ நகர் இடையே, நேற்று மெட்ரோ ரயில் இயக்கி, சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

சென்னை, வண்ணாரப்பேட்டை -- திருவொற்றியூர் விம்கோ நகர் இடையே, 3,770 கோடி ரூபாய் செலவில், 9.1 கி.மீ.,க்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. பயணியருக்கான அத்தியாவசிய கட்டுமான பணிகளை விரைவாக முடித்து, ஜனவரியில், இப்பாதையில் ரயில் இயக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.நேற்று முன்தினம், வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் விம்கோ நகர் இடையே, மெட்ரோ ரயில் பாதையில், டீசல் இன்ஜின் இயக்கி சோதனை நடத்தப்பட்டது.இப்பாதையில் உள்ள, எட்டு நிலையங்களின் நிறைவடைந்த பணிகள், பயணியர் வந்து, செல்வதற்கு போதுமானதா என, ஆய்வு செய்யப்பட்டது.

தண்டவாளத்தின் நிலை, சிக்னல் தொடர்புகள், நடை மேடைகள், காற்று கட்டுப்பாட்டு கருவிகள், தகவல் தொடர்பு கருவிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், மின் இயக்க தொடர்புகள் என அனைத்தும் சோதனை நடத்தப்பட்டது. அனைத்தும் திருப்திகரமாக இருந்தது.இதையொட்டி, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் பிரதீப்யாதவ், திட்ட இயக்குனர் ராஜீவ் நாராயண் திவேதி, ரயில் போக்குவரத்து பிரிவு இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி உட்பட, உயர் அதிகாரிகளால், வண்ணாரப்பேட்டை -- திருவொற்றியூர் விம்கோ நகர் இடையே, நான்கு பெட்டிகள் இணைக்கப்பட்ட மெட்ரோ ரயில், நேற்று இயக்கி சோதனை நடத்தப்பட்டது.

மெட்ரோ சோதனை ரயில், வண்ணாரப்பேட்டை -- விம்கோ நகர் இடையே, ஜன., இரண்டாவது வாரம் வரை, இயக்கப்பிரிவு அதிகாரிகளால் தொடர்ந்து இயக்கப்படும். இதன் பின், ரயில்வே பாதுகாப்பு கமிஷனர், இப்பாதையில், விரைவு ரயில் இயக்கி சோதனை நடத்த உள்ளார். இதைதொடர்ந்து, ஜன., இறுதியில், வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் இடையே, பயணியர் ரயில் இயக்கப்பட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X