செங்குன்றம் : பசு மற்றும் கன்றை அபகரித்தவர், அவற்றை தன்னிடம் ஒப்படைக்குமாறு கேட்ட உரிமையாளரை தாக்கினார்.
சென்னை, செங்குன்றம் அடுத்த கோட்டூர், அத்திவாக்கம், கோமதி அள்ளன் நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 56. அவர் வளர்த்த பசு மாடு, நேற்று முன்தினம் மாலை, அதே பகுதி, பாண்டுரங்கன் கோவில் தெருவில் உள்ள கோதண்டம், 41, என்பவர் வீட்டருகே, கன்று ஈன்றது. அவர், அவற்றை, தன் வீட்டில் கட்டி வைத்தார். அந்த பசுவின் உரிமையாளர் வெங்கடேசன், அவரது மகன் மனோன்மணியம், 29, ஆகியோர், நேற்று காலை, 9:00 மணி அளவில், அவரது வீட்டிற்கு சென்று, தங்களது பசு மற்றும் அதன் கன்றை ஒப்படைக்குமாறு கேட்டனர்.
இதனால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, கோதண்டராமனும், அவருடன் இருந்த மேலும் சிலரும், தந்தை, மகனை சுற்றி வளைத்து தாக்கினர். அதில், காயமடைந்த இருவரும், ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். செங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE