சென்னை, : கே.கே.நகரில் செயல்பட்டு வந்த, சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், டி.எம்.எஸ்., வளாகத்திற்கு இடம் மாற்றப்பட்டுள்ளது.
கே.கே.நகர், அரசு புறநகர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள, மாற்றுத் திறனாளிகளுக்கான, மாநில வள மற்றும் பயிற்சி மைய கட்டடத்தில், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் செயல்பட்டு வந்தது.இந்த அலுவலகம், இன்று முதல், தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., வளாகத்தில் உள்ள, வனத்துறை கட்டடத்தின் தரைதளத்தில் மாற்றப்பட்டு உள்ளது.மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவச் சான்று, அடையாள அட்டை மட்டும், கே.கே.நகர் அலுவலகத்தில் வழங்கப்படும்.
மற்ற அரசு உதவிகள் மற்றும் அனைத்து விதமான அலுவலக தொடர்புக்கு, டி.எம்.எஸ்., அலுவலகத்தை அணுகலாம் என, மாற்றுத் திறனாளிகளின் மாவட்ட நல அலுவலர் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE