தேசிய இளைஞர் விழா போட்டி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய இளைஞர் விழா போட்டி

Added : டிச 27, 2020
Share
சென்னை : தேசிய இளைஞர் விழாவை முன்னிட்டு, நாளை முதல், 'ஆன்லைனில்' நடக்கும், மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு சார்பில், சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு, தேசிய இளைஞர் விழா கொண்டாடப்படுகிறது.இதையொட்டி, மாவட்ட அளவிலான போட்டிகள், கொரோனா காரணமாக, ஆன்லைன் வாயிலாக, மெய்நிகர் முறையில் நடத்த, மத்திய அரசு அனுமதி

சென்னை : தேசிய இளைஞர் விழாவை முன்னிட்டு, நாளை முதல், 'ஆன்லைனில்' நடக்கும், மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு சார்பில், சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு, தேசிய இளைஞர் விழா கொண்டாடப்படுகிறது.இதையொட்டி, மாவட்ட அளவிலான போட்டிகள், கொரோனா காரணமாக, ஆன்லைன் வாயிலாக, மெய்நிகர் முறையில் நடத்த, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.அதன்படி, சென்னை மாவட்ட அளவில், நாளை துவங்கி, நாளை மறுநாள் வரை போட்டி நடக்கிறது. இதில், 15 - -29 வயதுக்குட்பட்ட, பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ - மாணவியர் பங்கேற்கலாம்.

இசை கருவிகள், இசை வாய்ப்பாட்டு, நாட்டுப்புற பாடல்கள், பரதநாட்டியம், நடனங்கள், உடை அலங்காரம், ஓவியம், சிற்பம் தயாரித்தல், புகைப்படம் எடுத்தல், கட்டுரை, கவிதை எழுதுதல், யோகா உள்ளிட்ட தனிநபர் மற்றும் குழு போட்டிகள் நடக்கின்றன.போட்டியாளர்கள், தங்களுடைய போட்டிக்கான வீடியோவை, உறுதிமொழி படிவத்தோடு இணைத்து, நாளை மறுநாள் மாலைக்குள், dsochn@gmail.com என்ற இ- - மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். இதில் வெற்றி பெறுபவர்கள், மாநில அளவில் பங்கேற்று வென்றால், தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கலாம்.மேலும் விபரங்களுக்கு, 044- 2664 4794, 74017 03480 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X