பொது செய்தி

தமிழ்நாடு

பெசன்ட் நகர் கடற்கரையில் போலீஸ் ரோந்து

Added : டிச 27, 2020
Share
Advertisement
பெசன்ட் நகர் : பெசன்ட் நகர் கடற்கரையில், பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து, போலீசார் ரோந்து வாகனத்தில் சென்று வலியுறுத்துகின்றனர். கொரோனா பாதிப்பால், மெரினா, பெசன்ட் நகர் கடற்கரையில், பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், 14ம் தேதி முதல், பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். இருந்தாலும், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என, அரசு

பெசன்ட் நகர் : பெசன்ட் நகர் கடற்கரையில், பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து, போலீசார் ரோந்து வாகனத்தில் சென்று வலியுறுத்துகின்றனர்.

கொரோனா பாதிப்பால், மெரினா, பெசன்ட் நகர் கடற்கரையில், பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், 14ம் தேதி முதல், பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். இருந்தாலும், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது. மீண்டும், கொரோனா அச்சம் ஏற்பட்டுள்ளதால், கடற்கரை செல்வோர் பாதுகாப்புடன் இருக்க, போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.புத்தாண்டையொட்டி, கடற்கரை செல்ல தடை இருந்தாலும், இந்நாளை சிறப்பிக்க, பொதுமக்கள் பகலில் செல்ல வாய்ப்புள்ளது. மேலும், பொங்கல் பண்டிகையையொட்டி, கடற்கரைக்கு செல்வோரும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதனால், போலீசார் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். மணலில் செல்லும் வாகனத்தில், போலீசார் ரோந்து செல்கின்றனர். கூட்டமாக அமர்ந்து பேசி அரட்டை அடிக்கும்போது, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.மணலில், எச்சில் கிடப்பதால், விளையாடும்போது, கட்டிப்பிடித்து உருளுவதை தவிர்க்க வேண்டும் என, போலீசார் வலியுறுத்தினர்.முதியவர்கள், குழந்தைகளை மிகவும் கவனமாக, கடற்கரையை பயன்படுத்த வேண்டும். கையில், கிருமிநாசினி வைத்திருக்க வேண்டும் என, வலியுறுத் தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X