திருவான்மியூர் : திருவான்மியூர் பகுதியில், 'கொக்கைன்' போதை பொருள் விற்ற, நைஜீரிய நாட்டைச் சேர்ந்த நபரை, போலீசார் கைது செய்தனர்.
அடையாறு காவல் துணை ஆணையரின் மொபைல் போனுக்கு, நேற்று முன்தினம், ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், திருவான்மியூரில், 'கொக்கைன்' என்ற போதை பொருட்கள் விற்கப்படுவதாக தகவல் தெரிவித்துள்ளார்.அவர் கூறிய அடையாளம் கொண்ட நபர், திருவான்மியூர் பேருந்து நிறுத்தத்தில் நின்றார். காவல் துணை ஆணையரின் கீழ் செயல்படும் தனிப்படை போலீசார், குறிப்பிட்ட நபரை நேற்று இரவு பிடித்தனர்.விசாரணையில், நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஆரிப், 46, என, தெரிந்தது.
கையில் இருந்த பையை சோதனை செய்தபோது, அதில், 55 கிராம் கொக்கைன் இருந்தது.ஒரு கிராம், 6,000 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். மேலும், மும்பையில் உள்ள இடைத்தரகர்களிடம், போதை பொருள் வாங்கி, சென்னை, புதுச்சேரியில் விற்பனை செய்வது தெரிந்தது. திருவான்மியூர் போலீசார், ஆரிப்பை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து, 55 கிராம் கொக்கைன், 65 ஆயிரம் ரூபாய், பாஸ்போர்ட் மற்றும் ஒரு மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE