பொது செய்தி

தமிழ்நாடு

பாரதி காலத்திற்கே இட்டுச்சென்ற பரத்சுந்தர்!

Added : டிச 27, 2020
Share
Advertisement
தேர்வில் வினாத்தாளுக்கு கடைசி கேள்வி யிலிருந்தும் பதில் எழுதலாம். அதை போல, பரத்சுந்தரின்கச்சேரியை, சுவாரசியத்தின் காரணமாக, கடைசி யில் இருந்து பார்க்கலாமா? கடைசியில் வந்தது லால்குடியின் பெஹாக் ராக தில்லானா. அதற்கு முன் வந்த பாடல், கடனைப் பற்றியது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். 'பார்த்துக் கடன் கொடுங்கள்' என்கிறார் கோபாலகிருஷ்ண பாரதி. கடன் கொடுக்க விழைவோருக்கு,

தேர்வில் வினாத்தாளுக்கு கடைசி கேள்வி யிலிருந்தும் பதில் எழுதலாம். அதை போல, பரத்சுந்தரின்கச்சேரியை, சுவாரசியத்தின் காரணமாக, கடைசி யில் இருந்து பார்க்கலாமா? கடைசியில் வந்தது லால்குடியின் பெஹாக் ராக தில்லானா. அதற்கு முன் வந்த பாடல், கடனைப் பற்றியது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். 'பார்த்துக் கடன் கொடுங்கள்' என்கிறார் கோபாலகிருஷ்ண பாரதி. கடன் கொடுக்க விழைவோருக்கு, அவர் கொடுக்கும் அறிவுரை தான் இந்தப்பாடல்.

அதிலுள்ள பிரச்னைகளை அலசி அலசி, பாட்டாகவே பாடி விட்டார் மனிதர். பாடலை உற்றுக் கேட்டால், பாரதி ஏதோ கடன் கொடுத்து அல்லலுற்றவர் போலத்தான் தோன்றிற்று. இது தற்காலத்திற்கு சரியான ஒரு பாட்டுதான். ஆனால், பாரதி யின் காலத்திலும், சென்ற நுாற்றாண்டிலும், இதே நிலைமை தானா?அடுத்த கேள்வி? பரத்சுந்தரின் மெயின் என்ன? பிலஹரி தான். ஆனால், அதற்கு முன் முகாரி ராக ஆலாபனையும், அதற்கான, 'என்றைக்கு சிவகிருபை' என்ற நீலகண்ட சிவனின் பாடலில், 'கன்று குரலைக் கேட்டு' எனும் அனுபல்லவி எடுப்பும், கச்சிதம். ஓன்று கவனிக்கப்பட வேண்டும். பிலஹரிக்கும், முகாரிக்கும் ஒரே தாளத்தில் இருந்து, முக்கியமாக ராகம் பாட முடியாது.

அங்ஙனமே பரத்சுந்தர் அவற்றிற்கான இடங்களில் நின்றிருந்து, ராக விஸ்தாரங்களை நடத்தி னார். பிலஹரியில் வந்த, 'காமாக் ஷி” என்ற தீக் ஷிதரின் கிருதிக்குக்குதான் கற்பனை ஸ்வரங்கள்.'காமகலே விமலே' எனுமிடத்தில். கச்சேரியில் பலவகை பாடல்களுக்கு இடமளிக்கும் முகமாக, மந்தாரி ராகத்தில், 'எந்நாளு' என்ற ஹரிகேசநல்லுார் முத்தையா பாகவதரின் கிருதியும் பாடப்பட்டது.வயலினிழைத்த நாகை ஸ்ரீராம் போன்றோர், அநேகமாக பரத்சுந்தரின் குரூப்பில் உள்ள ஒரு தோழர் போலத்தான்.

ராக ஆலாபனை ஸ்வரங்கள், இவற்றிலெல்லாம் சம அளவில் வயலினில் தேர்ச்சி பெற்றிருக்கிறார் என்பதற்கு, அத்தாட்சியளிக்கும் வண்ணம் தான் அவரின் வாசிப்பு இருந்தது. லயப் பிரிவில் மிருதங்கத்தில் திருவாரூர் பக்தவத்சலமும், பக்தா, கடவாத்தியத்தில் குருபிரசாத்தும், முதலில் வந்த சாருகேசி பாட்டிற்கு வந்த ஸ்வரங்களுக்கும், பிறகு பரத்சுந்தர் பாடிய, 'சிவகிருபை' பாட்டிற்கும் வாசித்ததில், நல்ல வித்தியாசத்தைக் காட்டினர்.பாடல்களை உயர்த்திப் பிடிப்பதே அவர்களது வேலை. தனியின் போது, சீனியரான பக்தா குருபிரசாத்தின் அனுபவத்தையும் மனதில் கொண்டு, அதற்கான பங்கை, அவருக்கு அளித்து வாசித்தது சிறப்பான லயானுபவத்தைக் கொடுத்தது.

பரத் சுந்தர் வந்து, வளர்ந்து, மனதைக் கொள்ளை கொண்ட ஒரு பாடகராக இப்போது ஆகிவிட்டார். ஒரு முன்னணி நட்சத்திரம் என்று கூட சொல்லலாம்.இந்த கச்சேரியை சென்னை சபாக்கள் கூட்டமைப்பின் வழி, நேரலையில் கேட்கவும், காணவும் பெற்றோம். -எஸ். சிவகுமார்இசை விமர்சனம்//

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X