சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.25 கோடி கோவில் நிலம் சென்னையில் அதிரடி மீட்பு

Added : டிச 27, 2020
Share
Advertisement
சென்னை, சிட்லபாக்கத்தில், போலி ஆவணம் மூலம் வளைக்கப்பட்ட, திருப்போரூர் கோவிலின், 25 கோடி ரூபாய் மதிப்பு நிலத்தை, கோவில் நிர்வாகம், அதிரடியாக மீட்டது. செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில், ஹிந்து சமய அறநிலைய துறை, கந்தசாமி கோவில் உள்ளது. கோவிலின், பல நுாறு ஏக்கர் நிலம், திருப்போரூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ளது. கோவில் நிலம் குறித்து, பழமையான ஆவணங்களில், கோவில் நிர்வாகம்

சென்னை, சிட்லபாக்கத்தில், போலி ஆவணம் மூலம் வளைக்கப்பட்ட, திருப்போரூர் கோவிலின், 25 கோடி ரூபாய் மதிப்பு நிலத்தை, கோவில் நிர்வாகம், அதிரடியாக மீட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில், ஹிந்து சமய அறநிலைய துறை, கந்தசாமி கோவில் உள்ளது. கோவிலின், பல நுாறு ஏக்கர் நிலம், திருப்போரூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ளது. கோவில் நிலம் குறித்து, பழமையான ஆவணங்களில், கோவில் நிர்வாகம் ஆய்வு செய்கிறது.இந்நிலையில், சென்னை, சிட்லபாக்கம் பகுதியில், திருப்போரூர், சிவசுப்பிரமணிய சாமி கோவில் என்ற பெயரில், 10 கிரவுண்ட் நிலம், 100 ஆண்டுகளுக்கு முன், நன்கொடையாக அளிக்கப்பட்ட விபரம் தெரியவந்தது.கோவில் செயல் அலுவலர் எம்.சக்திவேல் உள்ளிட்ட குழுவினர் ஆய்வு செய்தபோது, இப்பகுதி, பாம்பன் சுவாமிகள் தெருவில், புல எண், 68/2ல், இந்நிலம் உள்ளதை அறிந்தனர்.

மேலும், இந்நிலத்தை, இப்பகுதி தனிநபர், இப்புல எண்ணில், குடும்பமாக விரிவினை செய்ததாக, போலி ஆவணம் மூலம், தாம்பரம் சார் - பதிவாளர் அலுவலகத்தில், 2009ல், அவரது பெயரில் பதிந்ததையும் கண்டறிந்தனர். மேலும், கந்தசாமி கோவிலுக்கே, இந்நிலம் உரியதாக உறுதிப்படுத்தினர். இதையடுத்து, வருவாய் மற்றும் கோவில் நிர்வாகத்தினர், ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டனர்.இது குறித்து, செயல் அலுவலர் சக்திவேல் கூறியதாவது:திருப்போரூர், கந்தசாமி கோவிலுக்கு, சிட்லபாக்கம் பகுதியில், 10 கிரவுண்ட் நிலம் இருப்பதை, ஆவண பதிவு மூலம் அறிந்தோம். தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள நிலத்தை, சார் - பதிவாளர் அலுவலகத்தில், தனியார் பெயரில் பத்திரப்பதிவு செய்துள்ளனர்.எங்கள் கோவில் நிலம் என்பதை உறுதிப்படுத்தி, தற்போது மீட்டுள்ளோம். இதன் மதிப்பு, 25 கோடி ரூபாய். கோவில் நில புல எண்ணில், தனியார் பத்திரப்பதிவை நீக்கவும், தனியார் மீது, நில அபகரிப்பு நடவடிக்கை எடுக்கவும் உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X