500 மின்சார ரயில்கள் இன்று முதல் இயக்கம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

500 மின்சார ரயில்கள் இன்று முதல் இயக்கம்

Added : டிச 27, 2020
Share
சென்னை : சென்னை ரயில்வே கோட்டத்தில், இன்று முதல், 500 புறநகர் மின்சார ரயில் இயக்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின், சென்னை ரயில்வே கோட்டத்தில், படிப்படியாக புறநகர் மின்சார ரயில்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, தற்போது, தினமும், 410 மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது.கூட்டம் அதிகம் உள்ள காலை, 7:00 மணி முதல், 9:30 மணி வரையும், மாலை, 4:30 மணிமுதல் இரவு, 7:00 மணிவரை தவிர, மற்ற

சென்னை : சென்னை ரயில்வே கோட்டத்தில், இன்று முதல், 500 புறநகர் மின்சார ரயில் இயக்கப்படுகிறது.

கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின், சென்னை ரயில்வே கோட்டத்தில், படிப்படியாக புறநகர் மின்சார ரயில்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, தற்போது, தினமும், 410 மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது.கூட்டம் அதிகம் உள்ள காலை, 7:00 மணி முதல், 9:30 மணி வரையும், மாலை, 4:30 மணிமுதல் இரவு, 7:00 மணிவரை தவிர, மற்ற நேரங்களில், பொதுமக்கள் உட்பட அனைத்து பயணியரும் பயணிக்க, 23ம் தேதியில் இருந்து அனுமதிக்கப்பட்டுள்ளது.இதனால், மின்சார ரயில்களில், பயணியர் நெருக்கடி அதிகம் உள்ளதால், கொரோனா தொற்றால் பாதிக்கப் படாமலிருக்க, சமூக இடைவெளியை பின்பற்ற ஏதுவாக, கூடுதல் மின்சார ரயில்கள் இயக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்தனர்.

இதையேற்று, இன்று முதல் கூடுதலாக, 90 மின்சார ரயில் என மொத்தம், 500 மின்சார ரயில்கள் இயக்குவதற்கு, ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X