சென்னை: தமிழக காங்கிரஸ் மூத்த பெண் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான யசோதா நேற்று காலமானார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு, காங்கிரசார் அஞ்சலி செலுத்தினர்.ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில் இருந்து, நான்கு முறை எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யசோதா, 76. இவர், காங்கிரஸ் அறக்கட்டளை உறுப்பினராக இருந்தார்.இம்மாதம், 3ம் தேதி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற யசோதாவுக்கு, திடீரென மயக்கம் ஏற்பட்டது. அவர் உடனே, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பின், சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று காலமானார்.
சென்னை கோடம்பாக்கத்தில், அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த யசோதா உடலுக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர். மாலையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் வைக்கப்பட்ட யசோதா உடலுக்கு, தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி உட்பட காங்கிரசார் அஞ்சலி செலுத்தினர்.பின், மயிலாப்பூர் சுடுகாட்டில், அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. மறைந்த யசோதா, சென்னை எழும்பூரில் எளிய குடும்பத்தில் பிறந்தார். காமராஜரால் ஈர்க்கப்பட்ட அவர், இளம் வயதில் காங்கிரசில் இணைந்தார்.தமிழக காங்., துணைத் தலைவர், மகளிர் காங்., தலைவர், சட்டசபை காங்., தலைவர் போன்ற பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE