பொது செய்தி

தமிழ்நாடு

பிரிட்டனில் இருந்து வந்த 3 பேர் உட்பட 1,009 பேருக்கு கொரோனா பாதிப்பு

Added : டிச 27, 2020
Share
Advertisement
சென்னை: பிரிட்டனில் இருந்து திரும்பிய, மேலும் மூன்று பேர் உட்பட, நேற்று மட்டும், 1,009 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: மாநிலத்தில் உள்ள, 235 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில், நேற்று மட்டும், 64 ஆயிரத்து, 283 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில், சென்னையில், 290; கோவையில், 94 பேர் உட்பட, மாநிலம் முழுதும், 1,009 பேருக்கு தொற்று உறுதியானது. நேற்று

சென்னை: பிரிட்டனில் இருந்து திரும்பிய, மேலும் மூன்று பேர் உட்பட, நேற்று மட்டும், 1,009 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: மாநிலத்தில் உள்ள, 235 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில், நேற்று மட்டும், 64 ஆயிரத்து, 283 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில், சென்னையில், 290; கோவையில், 94 பேர் உட்பட, மாநிலம் முழுதும், 1,009 பேருக்கு தொற்று உறுதியானது. நேற்று மூன்று பேர் உட்பட, பிரிட்டனில் இருந்து நாடு திரும்பியவர்களில், 13 பேர், இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுடன் தொடர்பில் இருந்த, 93 பேரில், 12 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மார்ச் முதல் நேற்று வரை, 1.39 கோடி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், எட்டு லட்சத்து, 14 ஆயிரத்து, 170 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.சிகிச்சை பெற்றவர்களில் நேற்று, 1,091 பேர் குணமடைந்தனர். இவர்களுடன் சேர்த்து, இதுவரை, ஏழு லட்சத்து, 93 ஆயிரத்து, 154 பேர் சிகிச்சை முடிந்து, இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.

தற்போது சென்னையில், 2,854; கோவையில், 857; செங்கல்பட்டில், 617 என, 8,947 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றால், நேற்று சென்னையில் ஐந்து பேர் உட்பட, 10 பேர் இறந்துள்ளனர். இவர்களுடன் சேர்த்து இதுவரை, 12 ஆயிரத்து, 69 பேர் இறந்துள்ளனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X