சென்னை: ரேஷனில், மத்திய அரசின் சார்பில் இலவசமாக வழங்கப்படும், கறுப்பு கொண்டைக் கடலை வாங்க, மூன்று நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது.
நாடு முழுதும், கொரோனா தொற்று பரவலை தடுக்க, மார்ச் இறுதி யில் ஊரடங்கு அமலானதால், ஏழைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. அதனால், ரேஷன் கடைகளில், கார்டில் உள்ள ஒவ்வொரு நபருக்கும், கூடுதலாக, தலா, 5 கிலோ அரிசியை, ஏப்ரல் முதல் நவம்பர் வரை வழங்க, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
மேலும், ஜூலை முதல் நவம்பர் வரை, முன்னுரிமை, அந்தியோதயா கார்டுதாரர்களுக்கு, மாதம், 1 கிலோ கறுப்பு கொண்டைக் கடலை இலவசமாக வழங்குமாறும் தெரிவிக்கப்பட்டது.தமிழக ரேஷன் கடைகளில், நவ., வரை, மத்திய அரசின் கூடுதல் அரிசி வழங்கப்பட்டது. மத்திய தொகுப்பில் இருந்து, தமிழகத்திற்கு, அக்., இறுதியில் தான் கறுப்பு கொண்டைக் கடலை வந்தது.
இதனால், அரிசி பிரிவில் உள்ள, 1.11 கோடி முன்னுரிமை, அந்தியோதயா கார்டுதாரருக்கு, ஐந்து மாதங்களுக்கும் சேர்த்து, தலா, 5 கிலோ கறுப்பு கொண்டைக் கடலை வழங்கும் பணி, இம்மாதம் துவங்கியது. அதற்கு, பலரிடமும் வரவேற்பு கிடைத்துள்ளது.முன்னுரிமையற்ற அரிசி கார்டுதாரர்களுக்கு, கறுப்புக் கடலைக்கு பதில், 1 கிலோ துவரம் பருப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. சில கடைகளில் ஊழியர்கள், 5 கிலோவுக்கு பதில், 2, 3 கிலோ மட்டுமே கறுப்பு கொண்டைக் கடலை வழங்குகின்றனர்.இந்நிலையில், கறுப்புக் கடலை வாங்க, மூன்று நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது. அதற்குள், இதுவரை வாங்காதவர்கள், வாங்கி கொள்ளலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE