சென்னை: 'தி.மு.க.,வை ஓட, ஓட விரட்டி அடிக்க வேண்டும்' என, அ.தி.மு.க., தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய, முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கு, தி.மு.க., பொதுச் செயலர் துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:தமிழக வரலாற்றில் சிறப்பான ஆட்சி தந்தது, அ.தி.மு.க.,வே என, முதல்வர் இ.பி.எஸ்., கற்பனை கதை ஒன்றை சொல்லியிருக்கிறார். ஊழலுக்காக, முதல்வரேஜெயிலுக்கு போனதும், முதல்வர் மீதே சொத்துக்குவிப்பு வழக்கு வந்ததும்,அ.தி.மு.க., ஆட்சியில் தான்.இதுவரை, அக்கட்சியின் சார்பாக, நான்கு முதல்வர்கள் இருந்துள்ளனர்.
அதில், ஒருவர் சொத்துக்குவிப்பு வழக்கில் கைதானவர்; பின் சிறை சென்றவர்.மீதியுள்ள இரண்டு முதல்வர்களான இ.பி.எஸ்., - பன்னீர்செல்வம் சொத்துக் குவிப்பு புகாரில் சிக்கியுள்ளவர்கள். நீதிமன்றத்தின் தண்டனையை பெற வேண்டியவர்கள் என்பதை, ஏனோ முதல்வர் மறந்து விட்டார்.தேர்தலில் எதிரிகளை ஓட ஓட விரட்டி அடிக்க வேண்டும் என, வீராப்பு பேசியிருக்கும் முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன். முதல் தேர்தல் பிரசார கூட்டத்தில், சாதனைகளை சொல்ல முடியாமல் திணறியுள்ள முதல்வர் இ.பி.எஸ்., அடுத்தடுத்த கூட்டங்களிலும் திக்குமுக்காடப் போகிறார் என்பது மட்டும் நிச்சயம்.இவ்வாறு, துரைமுருகன் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE