திருப்பூர்:வெளிமாநில ஆரஞ்சு பழ வரத்து அதிகரித்துள்ளதால், ஒரு கிலோ, 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.மகாராஷ்டிரா, பஞ்சாப் மாநிலத்தில் இருந்து கமலா, மால்டா ஆரஞ்சு பழங்கள், அதிகளவில் விற்பனைக்காக எடுத்து வரப்படுகின்றன. திருப்பூர் மார்க்கெட் உட்பட ரோட்டோர கடைகள், தள்ளுவண்டி கடைகளில் அவற்றின் விற்பனை களைகட்டியுள்ளது.இப்பழங்களில் புளிப்பு மற்றும் இனிப்பு சுவை சேர்ந்திருப்பதால், பழ பிரியர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. கிலோ, 40 ரூபாய்க்கு விற்கப்படுவதால், பலரும் அதிகளவில் வாங்கி செல்கின்றனர். மொத்த வியாபாரத்தில் இரண்டரை கிலோ, 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.வியாபாரிகள் கூறுகையில், 'வெளிமாநில ஆரஞ்சு வரத்து அதிகரித்துள்ளதால், கிலோ, 70 ரூபாய் வரை விற்று வந்த ஆரஞ்சு, தற்போது, 40 ரூபாய்க்கு விற்கிறோம்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE