காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில், நேற்று அதிகாலை நடந்த சனிப் பெயர்ச்சி விழாவை, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அடுத்த திருநள்ளாறில், உலக பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனீஸ்வரர் தனி சன்னிதியில் அருள்பாலித்து வருகிறார்.நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சனீஸ்வரருக்கு மஞ்சள், சந்தனம், பன்னீர், பால், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட, 27 திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.அதிகாலை, 5:22 மணிக்கு சனீஸ்வரர், தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்ந்தபோது, சனி பகவானுக்கு, நவரத்தின அங்கி அலங்காரத்தில், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தங்க காகம் வாகனத்தில், சிறப்பு அலங்காரத்தில் இருந்த உற்சவர் சனீஸ்வரருக்கும், மகா தீபாராதனை நடந்தது.கட்டுப்பாடு
சனிப் பெயர்ச்சி விழாவிற்கு, பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்தனர்.'ஆன்லைன்' பதிவு வைத்திருந்தவர்களை மட்டும் அனுமதித்தனர்; மற்றவர்களை திருப்பி அனுப்பினர். கோவில் வளாகத்தில், உடல் வெப்ப பரிசோதனைக்கு பின், பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் தரிசனம் செய்தனர். நளன் குளம்
பரிகார தலமான திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலின், நளன் குளத்தில் நல்லெண்ணெய் தேய்த்து நீராடி, பழைய ஆடைகளை குளத்தில் விட்டு, சனீஸ்வரரை தரிசனம் செய்தால், சனி தோஷத்தால் ஏற்படும் கஷ்டங்கள் குறையும் என்பது ஐதீகம்.கொரோனா தொற்று காரணமாக, நளன் குளத்தில் குளிக்க, கோவில் நிர்வாகம் தடை விதித்ததால், நேற்று நளன் குளம் வெறிச்சோடியது. வியாபாரிகள் வேதனை
விழாவுக்கு, மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தது. நளன் குள விநாயகருக்கு தேங்காய் உடைக்கவும், மூலவருக்கு அர்ச்சனை செய்யவும் தடை விதிக்கப்பட்டது.இதனால், தேங்காய் கடை, ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், தள்ளுவண்டி கடைகள் என, அனைத்தும் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடின.குவிந்த பக்தர்கள்
தேனி மாவட்டம், குச்ச னுார் சனீஸ்வரர் கோவிலில், நேற்று அதிகாலை, 5:22 மணிக்கு சனீஸ்வர பகவான் பெயர்ச்சியானதை ஒட்டி, வேத மந்திரங்கள் முழங்க, மூலவருக்கு மகா தீபாராதனையும், உற்சவருக்கு அபிஷேக ஆராதனையும் நடந்தன. பரிகார ராசிகளான மிதுனம், கடகம், துலாம், கும்பம், தனுசு, மகர ராசிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.இந்த ராசிக்காரர்கள், கோவிலுக்கு முன்புறம் உள்ள சுரபி நதியில் நீராடி, எள் தீபம் ஏற்றுதல், உப்பு, பொரி கலவையை தலையை சுற்றி கொடி மரம் அருகில் போடுதல், காக்கை வாகனம் வாங்கி வைத்தல் உள்ளிட்ட பரிகாரங்களை செய்தனர்.போலீஸ், நீதித் துறை உள்ளிட்ட பல்வேறு துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். அதிகாலை, 3:00 மணி முதல், நீண்ட வரிசையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
'சிறுவர்கள், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி இல்லை' என்ற கோவில் நிர்வாகத்தின் அறிவிப்பு கடைப்பிடிக்கப்படவில்லை. பலரும் முக கவசம் அணிய வில்லை.முதல்வர்தரிசனம்சனிப் பெயர்ச்சி விழாவில், தருமபுரம் ஆதீனம், தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.பின், முதல்வர் நாராயணசாமி கூறுகை யில், ''திருநள்ளாறு சனிப் பெயர்ச்சி விழாவை தடுக்க, கவர்னர் கிரண்பேடி எடுத்த அனைத்து முயற்சிகளும் இறைவன் அருளால் முறியடிக்கப்பட்டுள்ளன.''நீதிமன்ற தீர்ப்பு, புதுச்சேரி மக்களுக்கு கிடைத்த வெற்றி. அதிகாரத்தில் இருப்பவர்கள், மதச் செயல்பாடுகளில் தலையிடக் கூடாது,'' என்றார்.குச்சனுாரில் குவிந்த பக்தர்கள்தேனி மாவட்டம், குச்சனுார் சனீஸ்வரர் கோவிலில், நேற்று அதிகாலை, 5:22 மணிக்கு சனீஸ்வர பகவான் பெயர்ச்சியானதை ஒட்டி, வேத மந்திரங்கள் முழங்க, மூலவருக்கு மகா தீபாராதனையும், உற்சவருக்கு அபிஷேக ஆராதனையும் நடந்தன. பரிகார ராசிகளான மிதுனம், கடகம், துலாம், கும்பம், தனுசு, மகர ராசிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
இந்த ராசிக்காரர்கள், கோவிலுக்கு முன்புறம் உள்ள சுரபி நதியில் நீராடி, எள் தீபம் ஏற்றுதல், உப்பு, பொரி கலவையை தலையை சுற்றி கொடி மரம் அருகில் போடுதல், காக்கை வாகனம் வாங்கி வைத்தல் உள்ளிட்ட பரிகாரங்களை செய்தனர்.போலீஸ், நீதித் துறை உள்ளிட்ட பல்வேறு துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். அதிகாலை, 3:00 மணி முதல், நீண்ட வரிசையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.'சிறுவர்கள், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி இல்லை' என்ற கோவில் நிர்வாகத்தின் அறிவிப்பு கடைப்பிடிக்கப்படவில்லை. பலரும் முக கவசம் அணியவில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE