பொது செய்தி

தமிழ்நாடு

திராவிட தத்துவத்தின் அருகி வரும் செல்வாக்கு!

Added : டிச 27, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
மார்ஷல் கோல்ட் ஸ்மித் என்பவர், ஒரு புத்தகம் எழுதினார். அதன் தலைப்பு என்னவென்றால், 'எது உங்களை இங்கே கொண்டு வந்ததோ, அது உங்களை அங்கே கொண்டு சேர்க்காது' என்பதுதான். இந்தத் தத்துவமானது, திராவிட கொள்கையில் அதீத நம்பிக்கை கொண்டிருக்கும், தி.மு.க.,வுக்கு தற்போது சாலவும் பொருந்தும்.கடந்த, 1967ல் எந்த திராவிட கொள்கையானது, தி.மு.க.,வை ஆட்சிக்கு கொண்டு வந்ததோ, அது இன்று வரை அவர்களை
திராவிட தத்துவத்தின் அருகி வரும் செல்வாக்கு!

மார்ஷல் கோல்ட் ஸ்மித் என்பவர், ஒரு புத்தகம் எழுதினார். அதன் தலைப்பு என்னவென்றால், 'எது உங்களை இங்கே கொண்டு வந்ததோ, அது உங்களை அங்கே கொண்டு சேர்க்காது' என்பதுதான். இந்தத் தத்துவமானது, திராவிட கொள்கையில் அதீத நம்பிக்கை கொண்டிருக்கும், தி.மு.க.,வுக்கு தற்போது சாலவும் பொருந்தும்.

கடந்த, 1967ல் எந்த திராவிட கொள்கையானது, தி.மு.க.,வை ஆட்சிக்கு கொண்டு வந்ததோ, அது இன்று வரை அவர்களை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. எனினும், அது 2021ல் அவர்களைக் கரை சேர்க்காது என்பது நிச்சயம்.கடந்த, 1972ல் எம்.ஜி.ஆர்., தனிக் கட்சி துவங்கி, 1977ல் ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து, இன்று வரை, தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு இடையே தனி மனித ஆளுமைகளுக்கு இடையேயான போட்டி தான் நிலவுகிறதே தவிர, கொள்கை ரீதியான போட்டி அல்ல.

தி.மு.க.,வை பொறுத்தவரை, எப்போது எல்லாம் அதன் சரக்கு எடுபடவில்லையோ அப்போது எல்லாம், அது, திராவிடக் கொள்கையை பிடித்துக் கொள்ளும். அதுதவிர ஒரு சில உதிரிக்கட்சிகள் மட்டுமே ஈ.வெ.ரா.,வின் கொள்கைகளையும், திராவிடக் கொள்கையையும் பின்பற்றுவதாக சொல்லிக் கொண்டிருக்கின்றன.தி.மு.க.,வை பொறுத்தவரை,50 ஆண்டுகளாக திராவிடம்,திராவிடம் என பேசியே நல்ல அறுவடையை பார்த்து விட்டனர்.தற்போதைய நிலையில், கொள்கை ரீதியாக, தி.மு.க.,வை பொறுத்தவரை, மிகப்பெரிய பின்னடைவும், அ.தி.மு.க.,வை பொறுத்தவரை, ஓரளவு பின்னடைவும் ஏற்பட்டு, திக்கு தெரியாமல் இருக்கின்றனர்.


முதல் வாக்காளர்கள்கடந்த, 1977ம் ஆண்டு ஓட்டுரிமை பெற்றவர்கள் தற்போது, 60 வயதைத் தாண்டி இருப்பர். அவர்களுக்கு திராவிடக் கொள்கைகள் பற்றி ஓரளவேனும் தெரிந்திருக்கலாம். ஆனால், 1977க்கு பின், பிறந்தவர்கள் இன்றைக்கு, 40 வயதை தொட்டவர்கள் எல்லோருமே, கொள்கை ரீதியாக அல்லாமல், தனி மனித ஈர்ப்பின் காரணமாகவே, கட்சிகளின் விசுவாசிகளாக இருக்கின்றனர்.

கடந்த, 2000வது ஆண்டுக்குப் பின், பிறந்த வாக்காளர்கள் மிக அதிகமான தொழில்நுட்பத்தை விரும்பக்கூடிய இளைஞர்களாக இருப்பர். அவர்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனைகள், எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்கும்.எனவே, 1977க்கு பின், வாக்காளர் பட்டியலில் சேர்ந்தவர்கள் தான், இன்றைக்கு, 52 சதவீத வாக்காளர்கள். இதில், வாக்காளர்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களை கழித்து பார்ப்போமேயானால், இவர்களுடைய எண்ணிக்கை, 68 சதவீதத்தை தொட்டு விடும்.2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 19 வயதிற்கு உட்பட்டவர்களுடைய சதவீதம், 32 ஆகும்.


வாழ்நாள் உண்டுஒவ்வொரு தத்துவத்திற்கும் ஒரு வாழ்நாள் உண்டு. உலகின் இரு பெரும் தத்துவங்களில் ஒன்றாக கோலோச்சிய கம்யூனிசம், இப்பொழுது வரலாறு ஆகிவிட்டது. திராவிடத் தத்துவ மானது தோன்றிய நாளிலிருந்து, வேறு வேறு உருவெடுத்து வந்துள்ளது. திராவிட, ஆரிய இனப் பிரிவினைவாதமாக ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கொள்கையானது, ஜாதிகளுக்கு எதிராக மாறி, குறிப்பாக பிராமண எதிர்ப்பாக உருவெடுத்து, பின், மூட நம்பிக்கைகளுக்கு எதிராக மறு உருவம் எடுத்து, அதையும் தாண்டி, ஹிந்து மதக் கடவுள்களின் எதிர்ப்பாக உருமாறி, கடைசியாக ஹிந்திக்கு எதிரானதாக பிறப்பெடுத்து நிற்கிறது.

எதுவாகினும், இந்த எதிர்மறை எண்ணங்கள், ஒவ்வொன்றாக அவற்றின் தன்மையை இழந்து வருகிறது என்பது தான் உண்மை. இதற்கு மாறாக, அம்பேத்கருடைய கொள்கைகளானது காலப்போக்கில் இன்னும் உறுதியாக வளர்ந்து வருகிறது. அம்பேத்கரின் கொள்கைகளில் நேர்மறையான எண்ணங்களும், வலிமை மிக்க ஒன்றிணைந்த தேசமும் முதலிடம் வகிக்கிறது.அதில், பிரிவினைவாதத்திற்கு இடமில்லை. அவருடைய கொள்கைகளை அனைத்துக் கட்சிகளும், அனைத்து ஜாதிகளும் ஏற்றுக் கொள்கின்றனர்.

உண்மையைச் சொல்லப் போனால் திராவிட கொள்கைகளும் அம்பேத்கரின் வழிமுறைகளும் நேர் எதிர், பாதையில் செல்லக்கூடியது. நடிகர் கமல்ஹாசனை பொறுத்தவரை, அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அவரோ அருகி வரும் திராவிட தத்துவத்தை மீட்டமைக்க முயல்கிறார். திராவிடக் கொள்கைகளுக்குப் புத்துயிர் அளிக்க அவர் எடுத்துக்கொள்ளும் முயற்சியும், முன்யோசனை இல்லாத, அவருடைய பேச்சுகளும் எதிரிகளின் பலத்தைத்தான் கூட்டியிருக்கிறது.


மாற்றி யோசிகொள்கைகள் அடிப்படையிலான காலம் மலையேறி விட்டது. இங்குள்ள மாநிலக் கட்சிகள், இன்றைய இளைஞர்களோடு தங்களை இணைத்துக் கொள்ள வேண்டுமென்றால், புதிய தளங்களிலிருந்து யோசிப்பதும், எதிர்காலத்தைப் பற்றி சிந்திப்பதும் அவசியமாகும். இந்த இடத்தில் தான், நடிகர் ரஜினிகாந்துக்கு ஒரு சாதகமான அம்சம் இருக்கிறது. அவர் நேர்மையானவர், துாய்மையானவர் என்ற ஒரு நம்பிக்கை மக்களிடையே இருக்கிறது.

மேலும், அவருக்குத் தேவையில்லாத சுமைகள் ஏதுமில்லை. அவர் ஒரு புதிய கோணத்தில் சிந்திக்கத் துவங்கி இருக்கிறார்.அந்த சிந்தனை, தமிழகத்துக்கு மிகவும் புதிது. அதுமட்டுமல்லாமல் அவருடைய எதிர்காலத் திட்டங்கள் தொலைநோக்கு பார்வை உடையதாக இருக்கிறது. அவருடைய பேச்சுகள் எவ்விதஅலங்காரமும் இல்லாமல் எளிமையாக இருக்கிறது.

மேலும், ரஜினிக்கு ஆலோசனை வழங்கும் சிந்தனையாளர்களால் ரஜினி கவனிக்கப்பட வேண்டியவர் ஆகிறார்.ஒரு தலைவர், அவருடைய ஆலோசகர்களாலும், யாருடைய கருத்துகளை அவர் கேட்கிறார் என்பதாலுமே அறியப்படுகிறார். அரைத்த மாவையும், ஆறின கஞ்சியையுமே பார்த்துப் பழகியதமிழக மக்கள், புதுமையை எதிர்நோக்கி இருக்கின்றனர்.

பழைய அரசியல் கட்சிகள் எல்லோருமே, இதுவரை தங்களை நகர்வித்த கருத்துகள், 2021ல் எடுபடாது என்பதை உணர வேண்டும். புதிதாக உருவாகும் ரஜினியின் கட்சி, பழைய கட்சிகளின் வலையில் சிக்கிவிடாமல் இருக்க வேண்டும்.
ஜி.ரமேஷ்

பேராசிரியர்ஐ.ஐ.எம்., பெங்களூரு.

rameshg@iimb.ac.in

தமிழில்:கரு. ஞானசம்பந்தன்மதுரை.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
28-டிச-202008:23:01 IST Report Abuse
Allah Daniel 1996ல் தீயமுகவை காப்பாற்றியது ரஜினி என்னும் தனிமனிதர்.... 2006ல் தீயமுகவை காப்பாற்றியது அவர்களது 23 கூட்டணி கட்சிகள்... திராவிட கொள்கைகள் அவர்களை ஒருபொழுதும் காப்பாற்றியதில்லை...
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
28-டிச-202004:39:31 IST Report Abuse
J.V. Iyer திராவிட கொள்கை என்பது குடும்ப சொத்து, கொள்ளை அடிப்பது, ஊழல் செய்வது, பொய்பேசுவது, கலேறி கலாசாரம் என்று எல்லோருக்கும் தெரியும்.
Rate this:
Cancel
28-டிச-202004:02:39 IST Report Abuse
Nanda Kumar  Dr This article is exactly nice and reflecting my feelings. With the younger generation nowadays think very clearly on which is right and wrong, the present day politicians view on EVR policy, or so called DRAVIDIAN policy, or by caste divide policy or by saying TAMIZHAN- TAMIZHAN, WILL NEVER BE SUCCESSFUL.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X