'தமிழக அரசு வழங்கும், 2,500 ரூபாய் பொங்கல் பரிசு, பண சுழற்சியை ஏற்படுத்தும்,'' என, சென்னை ஆடிட்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது:மத்திய - மாநில அரசுகளுக்கு, 'பட்ஜெட், நான் பட்ஜெட்' என்ற முறை இருக்கிறது.
பட்ஜெட் இல்லை என்றாலும், பல வகையில் வருமானத்தை பெருக்கி கொள்ள, அரசுகளுக்கு வழிகள் உண்டு.அந்த வகையில், தமிழக அரசு பொங்கல் பரிசாக, 2,500 ரூபாய் தருவதற்கு பட்ஜெட் ஒதுக்கியுள்ளோம் என்று தான் கூறியுள்ளது. இது சாதகமாக இருந்தாலும், இதேபோல், மக்கள் ஒவ்வோர் ஆண்டும் பண பரிசை எதிர்பார்க்க வாய்ப்பு இருப்பதால், சிறு பாதகம்.கொரோனா காலத்தில், வினியோகம் சார்ந்து நிதி ஒதுக்கப்பட்டது.
ஆனால், இந்த பொங்கல் பரிசு பணம், மக்களின் நுகர்வு செலவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், நுகர்வு அதிகரித்து, பண சுழற்சியை ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம்.பிற நாடுகளிலும் இதுபோன்ற நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அமெரிக்காவில் கூட தேர்தல் நேரம், கொரோனா நிவாரணமாக, 4.5 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கப்பட்டது. தேர்தல் நேரம் நிதி ஒதுக்கியது, பல வகையில் விமர்சிக்கப்பட்டது. ஒரு குறிப்பிட்ட நேரம், மக்களுக்காக இப்படி செலவு செய்வது ஒன்றும் புதிதல்ல.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE