மதுரை: அலுவலக உதவியாளர் களுக்கு இணையாக, மாத சம்பளம், 15 ஆயிரத்து, 700 ரூபாய் வழங்குவது உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஐந்து கட்ட போராட்டங்களில் ஈடுபட, தமிழ்நாடு வருவாய் துறை கிராம உதவியாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.
மதுரையில் சங்க மாநில தலைவர் ராஜசேகர் கூறியதாவது:காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை, விரைந்து நிரப்ப வேண்டும். பதவி உயர்வு பெற்ற கிராம உதவியாளர்களின் ஓய்வூதிய குறைபாடுகளை களைய வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல, கிராம உதவியாளர்களுக்கு, 7 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.
இதுபோன்ற கோரிக்கை களை வலியுறுத்தி, 2021 ஜன., 5ல் வட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம், ஜன., 7, 8ல், காத்திருப்பு போராட்டம், ஜன., 21ல் சென்னையில் பெருந்திரள் முறையீடு, பிப்.,2ல் மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடத்தப்படும்.அதன்பின்னும் கோரிக்கைகளை நிறைவேற்ற தவறினால், பிப்., 9 முதல் காலவரையற்ற போராட்டம் துவங்கும். அரசு, உடனடியாக சங்க நிர்வாகி களை அழைத்து பேசி தீர்வு காண வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE