சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவி இறந்த அதிர்ச்சி மாரடைப்பில் கணவர் பலி

Added : டிச 27, 2020
Share
Advertisement
அவிநாசி: மனைவி இறந்த சோகம் தாங்காமல், கணவரும் மாரடைப்பால் உயிரிழந்தார்.திருப்பூர் மாவட்டம், அவிநாசி நேரு வீதியைச் சேர்ந்தவர் பெருமாள் மூர்த்தி, 66; கருவூல துறையில் பணிபுரிந்து, ஓய்வு பெற்றவர். மனைவி ராதா, 60; வருவாய் துறையில் பணிபுரிந்து, ஓய்வு பெற்றவர். கடந்த, 24ம் தேதி, ராதாவுக்கு, திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்த

அவிநாசி: மனைவி இறந்த சோகம் தாங்காமல், கணவரும் மாரடைப்பால் உயிரிழந்தார்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி நேரு வீதியைச் சேர்ந்தவர் பெருமாள் மூர்த்தி, 66; கருவூல துறையில் பணிபுரிந்து, ஓய்வு பெற்றவர். மனைவி ராதா, 60; வருவாய் துறையில் பணிபுரிந்து, ஓய்வு பெற்றவர். கடந்த, 24ம் தேதி, ராதாவுக்கு, திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்த பெருமாள் மூர்த்தி, இரண்டு நாட்கள் உடனிருந்து கவனித்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு, வீட்டுக்கு சென்றுஉள்ளார்.நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு, மருத்துவ மனையில் இருந்து, பெருமாள் மூர்த்தியை தொடர்பு கொண்ட அவரது மகன், 'தாய் இறந்து விட்டார்' என்ற தகவலை கூறியுள்ளார். அதிர்ச்சியில் உறைந்த பெருமாள் மூர்த்தி, மயக்கமடைந்தார். அருகேயுள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்து சென்றபோது, 'மாரடைப்பால் ஏற்கனவே இறந்து விட்டார்' என, டாக்டர்கள் கூறியுள்ளனர். இறப்பிலும் இணை பிரியாத தம்பதியின் மறைவு, அவிநாசி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X