தமிழ்நாடு

ரயில்வே சுரங்கப்பாதை ஊற்று நீரால் தொடரும் சிக்கல்! காவேரிப்பாக்கம் பொது மக்கள் கடும் அவதி

Added : டிச 27, 2020
Share
Advertisement
திண்டிவனம் : திண்டிவனம் காவேரிப்பாக்கம் ரயில்வே சுரங்கப்பாதையில் தொடர்ந்து வெளியேறும் ஊற்று நீரால், பொது மக்கள், வாகன ஓட்டிகள் தினந்தோறும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.திண்டிவனம் காவேரிப்பாக்கம் பகுதியில் வசிக்கும் மக்கள், நகரப்பகுதிக்கு வருவதற்கு, எம்.ஆர். எஸ். ரயில்வேகேட் வழியை பயன்படுத்தி வந்தனர். இந்த வழியை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு, அங்குள்ள ரயில்வே

திண்டிவனம் : திண்டிவனம் காவேரிப்பாக்கம் ரயில்வே சுரங்கப்பாதையில் தொடர்ந்து வெளியேறும் ஊற்று நீரால், பொது மக்கள், வாகன ஓட்டிகள் தினந்தோறும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

திண்டிவனம் காவேரிப்பாக்கம் பகுதியில் வசிக்கும் மக்கள், நகரப்பகுதிக்கு வருவதற்கு, எம்.ஆர். எஸ். ரயில்வேகேட் வழியை பயன்படுத்தி வந்தனர். இந்த வழியை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு, அங்குள்ள ரயில்வே கேட் தடையாக இருந்து வந்தது. அடிக்கடி ரயில் வருவதால் பெரும்பாலான நேரம் கேட் மூடியிருக்கும். இதை கருத்தில் கொண்டு, ரயில்வே நிர்வாகம், காவேரிப்பாக்கம் பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைத்துக் கொடுத்தது.

இதனால் காவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்த பொது மக்கள் மட்டுமல்லாமல், மற்ற பகுதியிலிருந்து திண்டிவனம் நகருக்கு வருபவர்கள் மேம்பாலத்தின் வழியாக சுற்றிக்கொண்டு வராமல், சுரங்கப்பாதை வழியாக குறுக்கு வழியில் நகரத்திற்கு வர முடியும்.இதனால் இந்த சுரங்கப்பாதையை பொது மக்கள் அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர். இந்த சுரங்கப்பாதையில் மழைக்காலம் வந்துவிட்டால் திடீர் சிக்கல் ஏற்பட்டுவிடும்.

சமீபத்தில் ஏற்பட்ட புயல் தாக்கம் மற்றும் தொடர் மழையால் திண்டிவனம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் ரயில்வே சுரங்கப்பாதையில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. குளம் போல் தேங்கியுள்ள மழை நீருக்குள் புகுந்துதான் பொது மக்கள் இரு சக்கர வாகனத்தை ஓட்டி நகரப்பகுதிக்கு வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.தற்போது மழை இல்லாமல் வெயில் அடித்து வரும் வேலையில் கூட, காவேரிப்பாக்கம் சுரங்கப்பாதையில் குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது. இதற்கு முக்கிய காரணம், தொடர் மழை பெய்யும் காலங்களில் காவேரிப்பாக்கம் ஏரி நிரம்பிவிடும்.

இதனால் காவேரிப்பாக்கம் பகுதியிலுள்ள நிலத்தடியின் நீர் மட்டம் உயர்ந்துவிடும். இதன்காரணமாக ரயில்வே லைனுக்கு கீழே கட்டப்பட்டுள்ள சுரங்கப்பாதையின் கீழ் பகுதியில் ஊற்று நீர் அதிக அளவில் சுரந்து வெளியேறி வரும். ஊற்று நீர் தொடர்ந்து வருதால், தரைப்பாலத்தின் பகுதியில் அதிக அளவில் நீர் தேங்கிவருகின்றது. தேங்கியிருக்கும் நீரை வெளியேற்றுவதற்காக திண்டிவனம் நகராட்சி சார்பில், டீசல் மோட்டார் மூலம் பைப் பொருத்தப்பட்டு, மேல்பகுதிக்கு கொண்டு வந்து, ஊற்று நீரை வெளியேற்றி வருகின்றது.

டீசல் மோட்டார் மூலம் நீரை வெளியேற்றுவது நகராட்சிக்கு கூடுதல் செலவு ஆகின்றது.இதுபற்றி நகாரட்சி தரப்பில் கேட்ட போது, '' சுரங்கப்பாதை அடியில் ஊற்று வரும் பாதையை அடைத்தால், ரயிவே தண்டவாளம் உள்ள பகுதிக்கு நீர் சென்றுவிடும்.இதனால் தண்டவாளம் அமைந்துள்ள பகுதி பாதிக்கப்படும்.

இதை கருத்தில் கொண்டுதான், டீசல் மோட்டார் மூலம் ஊற்று நீர் வெளியேற்றப்படுகின்றது. இந்த பிரச்னை மழைக்காலங்களில் ஆண்டு தோறும் நீடித்து வருகின்றது. காவேரிப்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் குறைந்துவிட்டால் தரைப்பாலத்தில் ஊற்று வருவது நின்றுவிடும்'' என்ற தெரிவித்தனர்.

தொடர்ந்து தரைப்பாலத்தின் அடியில் வெளியேறும் ஊற்று நீரை தடுத்து நிறுத்துவதற்கு நகராட்சி அதிகாரிகள் போதுமான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X