காரைக்கால் : காரைக்காலில், பி.ஆர்.டி.சி., ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 6ம் நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி சாலை போக்குவரத்து கழக விரைவு பஸ் வழித் தடங்கள் தனியாருக்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதனைக் கண்டித்தும், அரசின் முடிவை திரும்ப பெற வலியுறுத்தி காரைக்காலில் பி.ஆர்.டி.சி., ஊழியர்கள் கடந்த 22ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.பி.ஆர்.டி.சி., ஊழியர்கள் சங்க தலைவர் குமரகுரு தலைமையில் நடைபெற்று வரும் இப்போராட்டம் 6ம் நாளாக நேற்றும் நீடித்தது. போராட்டத்தில் அரசு ஊழியர் சம்மேளன கவுரவ தலைவர் ஜார்ஜ், தலைவர் சுப்ரமணியன், பொதுச் செயலர் ஷேக் அலாவுதீன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE