திருப்பூர்:பொதுத்தேர்வுக்கான பாடத்திட்டம் குறித்து அறிவிப்பை பெற்றோரும், மாணவர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத் தேர்வு உறுதியென தேர்வுத்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இதற்கு, முதன்மை கல்வி அலுவலர் தலைமையில், மாவட்ட அளவிலான தேர்வுத்துறை தயாராகி வருகிறது.அதே நேரம், பாடத்திட்டம் என்ன, என்பது குறித்து 'சஸ்பென்ஸ்' நீடிக்கிறது. தனியார் பள்ளிகள் 'ஆன்லைன்' மூலம் வகுப்ப நடத்துகின்றன.
அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.அதே நேரம், எந்தெந்த பகுதியில் இருந்து, எத்தகைய பாடங்கள் தேர்வில் கேட்கப்படும் என்பது குறித்த அறிவிப்பு தெளிவாக இல்லை.பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது;வழக்கமாக டிச., இரண்டாவது வாரத்தில், தேர்வு அட்டவணை வெளியாகிவிடும். இரு ஆண்டுகளாக, தேர்வு முடிவு வெளியிடும் போது, அடுத்தாண்டுக்கான அட்டவணை வெளியிடப்பட்டு வந்தது.
2020 ஏப்ரல், மே மாதங்களில், கொரோனா ஊரடங்கால், பள்ளி திறப்பு குறித்து முடிவெடுக்கப்படாததால், அதற்கான வாய்ப்பு இல்லாமல் போனது. 2021 பொது தேர்வு அட்டவணையும் வெளியாகவில்லை.அடுத்தாண்டு, சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்துக்குள் தேர்வு நடத்தி முடிக்க வேண்டும். இரு மாதம் மட்டுமே முழுமையாக இருப்பதால், பாடத்திட்டம், புளூபிரின்ட், தேர்வு அட்டவணை குறித்து மாணவர் மற்றும் பெற்றோருக்கு தெளிவுப்படுத்த வேண்டியது அவசியம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE