புதுச்சேரி : விஷம் வைத்து நான்கு நாய்களை சாகடித்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
புதுச்சேரி கவுண்டன்பாளையம், பெருமாள் கோவில் வீதியில் 4 நாய்கள் விஷம் வைத்து சாகடித்து, கழிவு நீர் வாய்க்காலில் வீசப்பட்டுள்ளதாக, கடந்த 25ம் தேதி, 1031 தொலைபேசி எண்ணுக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு சென்ற உழவர்கரை நகராட்சி சுகாதார பிரிவு உதவி பொறியாளர் சிவக்குமார், வாய்க்காலில் இறந்து கிடந்த 4 நாய்களையும் ஜே.சி.பி., இயந்திரம் உதவியுடன் வெளியே எடுத்து, மேட்டுப்பாளையம் கனரக வாகன நிறுத்தும் இடத்திற்கு கொண்டு சென்றனர்.
அங்கு, கால்நடை மருத்துவர்கள் மூலம் பிரேத பரிசோதனை செய்ததில், நான்கு நாய்களும் உணவில் விஷம் வைத்து சாகடித்திருப்பது தெரிய வந்தது. பின்னர் நான்கு நாய்களும் அங்கேயே பள்ளம் தோண்டி புதைக்கப்பட்டது.இதுகுறித்து உழவர்கரை நகராட்சி பொறியாளர் சிவக்குமார் அளித்த புகாரின்பேரில், கோரிமேடு போலீசார், வழக்கு பதிந்து, நாய்களை விஷம் வைத்து சாகடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE