திருப்பூர்:புத்தக திருவிழா ரத்து செய்யப்பட்டு, புத்தக விற்பனை மட்டும் நடத்தப்படுகிறது.திருப்பூரில், பின்னல் புக் டிரஸ்ட் மற்றும் பாரதி புத்தகாலயம் சார்பில் ஆண்டுதோறும், புத்தக திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. பண்பாட்டு திருவிழாவாக, இந்நிகழ்வு நடத்தப்பட்டு வந்த நிலையில், அதிகளவு பதிப்பகம் மற்றும் விற்பனையாளர்களை உள்ளடக்கி, நுாற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படும். ஏராளமான தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள், அரங்குகளில் இடம்பெறும்.நடப்பாண்டு, கொரோனா பரவலால், புத்தக திருவிழா நடத்தப்படவில்லை. அதற்கு மாறாக, மங்கலம் ரோடு, கே.ஆர்.சி., சிட்டி சென்டரில், பின்னல் புக் டிரஸ்ட் சார்பில் பாரதி புத்தகாலயம் வெளியீடுகள், 50 சதவீத தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகிறது. வரும், ஜன., 3ம் தேதி வரை, இந்த சிறப்பு கண்காட்சி விற்பனை நடைபெறுகிறது. இதை, கிட்ஸ் கிளப் பள்ளி தாளாளர் மோகன் கார்த்திக், துவக்கி வைத்தார்.விழா குழுவினர் கூறுகையில், 'புத்தக திருவிழாவின் போது, பள்ளி மாணவ, மாணவியருக்கு அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி, சிந்தனைக்கு விருந்து படைக்கும், மேடை நிகழ்ச்சி நடத்தப்படும். பல தலைப்புகளில் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று பேசுவர். இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறும். கொரோனா பரவலால், மக்கள் பாதுகாப்பு கருதி நடப்பாண்டு விழா நடத்தப்படவில்லை; மாறாக, புத்தக விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE