ராமேஸ்வரம்: 12ம் நாளாக ராமேஸ்வரத்தில் கனரக விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளதால், மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
டிச.,14ல் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களில் 29 பேரையும், 4 படகையும் இலங்கை கடற்படை கைது செய்தது. அவர்களை இன்று (டிச.,28) வரை தனிமையில் வைக்க அந்நாடு சுகாதாரத்துறை உத்தரவிட்டது. இவர்களை விடுவிக்க கோரி டிச.,16 முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.இதில் 150 சிறிய ரக விசைப்படகுகள் ஸ்டிரைக்கை புறக்கணித்து மீன்பிடிக்க சென்றனர். 600க்கும் மேலான கனரக விசைப்படகுகள் தொடர்ந்து 12ம் நாளாக ஸ்டிரைக்கில் உள்ளனர்.
வர்த்தகம் பாதிப்புகனரக விசைப்படகு மீன்வரத்து இன்றி துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீன் ஏற்றுமதி நிறுவனம், கோவை, கேரளா மீன் சந்தைக்கு அனுப்பும் வியாபாரிகள் ராமேஸ்வரம் வரவில்லை. மீனவர்கள், சார்பு தொழிலாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.டிச.,30ல் இந்திய, இலங்கை மீனவர்கள் பிரச்னை குறித்து தமிழக, இலங்கை அமைச்சர், அதிகாரிகள் இடையே வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேச்சு வார்த்தை நடக்க உள்ளது.இதன் பின் கனரக மீனவர்களும் ஸ்டிரைக்கை வாபஸ் பெற்று மீன்பிடிக்க செல்ல வாய்ப்பு உள்ளது என ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE