திருப்பூர்:முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளையொட்டி, இலவச மருத்துவ முகாம் நடந்தது.திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், திருப்பூர் காட்டுவளவில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளை முன்னிட்டு, இலவச மருத்துவ முகாம் மற்றும் மத்திய அரசின் நலத்திட்ட முகாம் நடந்தது. மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமை வகித்தார். பொது செயலாளர் தங்கராஜ் முன்னிலை வகித்தார்.முகாமில், டாக்டர்கள் குழுவினரால் காது, மூக்கு, தொண்டை மற்றும் பொது மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
செல்வமகள் சேமிப்பு திட்டம், காப்பீடு, இலவச சமையல் காஸ் திட்டம், முதியோர் பென்ஷன் போன்ற நலத்திட்டம் சார்ந்த முகாமும் நடந்தது.ஊடக பிரிவு மாவட்ட தலைவர் நரேன் பாபு, மாவட்ட செயலாளர் திருமந்திராச்சல மூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். திருப்பூர், வடக்கு மாவட்ட ஊரக நகர்புற வளர்ச்சி பிரிவின் சார்பில், கருவலுார் சங்கரா சேவாலய குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. அப்பிரிவின் மாவட்ட தலைவர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக தொகுதி பொறுப்பாளர்கள் கதிர்வேல், விநாயகமூர்த்தி, சண்முகம் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE