திருப்பூர்:'மாவட்டத்தில், எங்கெங்கு புதிய துவக்கப் பள்ளி துவங்க வேண்டியிருக்கும்' என்பது குறித்து ஆய்வு செய்து, விபரம் தெரிவிக்க, கல்விதுறை உத்தரவிட்டுள்ளது.மாணவர்கள் கல்வி கற்க வசதியாக, மூன்று கி.மீ.,க்கு ஒரு நடுநிலைப்பள்ளி, ஒரு கி.மீ.,க்கு ஒரு துவக்கப்பள்ளி இருக்க வேண்டும் என்பது விதி. இதனை உறுதி செய்ய, ஒவ்வொரு ஆண்டும் ஊராட்சி, பேரூராட்சி, சிறப்பு நிலை நகராட்சி மற்றும் மாநகராட்சியில் உள்ள பள்ளிகள், புதியதாக உருவாக்க வேண்டிய பள்ளிகள், தரம் உயர்த்த வேண்டிய பள்ளிகள் குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது.ஆய்வு முடிவில், தேவையிருப்பின் புதிய துவக்க பள்ளி கட்டடம் கட்டப்படும். மாணவர் எண்ணிக்கை அதிகம் உள்ள துவக்கப்பள்ளி, நடுநிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு, கூடுதல் கட்டடம் கட்டப்படும்; இதற்கு தேவையான நிதி அரசால் வழங்கப்படும்.அந்த அடிப்படையில், அரசு பள்ளிகளின் நிலை குறித்து, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் விபரம் சேகரிக்க துவங்கியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE