திருமுருகன்பூண்டி, கோபால்ட் மில் பகுதியில், ரோட்டில் பரவியுள்ள மண்ணை அகற்ற வேண்டும்.- எஸ்.விஜயா, திருமுருகன்பூண்டி.தடுமாறும் மக்கள்திருப்பூர், குமரன் ரோட்டை கடந்து செல்ல முடியாமல், மக்கள் தடுமாறுவதால், நடை மேம்பாலம் அமைக்க வேண்டும்.-வி.சிவபிரகாஷ், திருப்பூர்.ரோடு மோசம்இடுவம்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே, ரோடு சேதமடைந்துள்ளதால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.-ஆர்.கதிரேசன், இடுவம்பாளையம்.'பேட்ஜ் ஒர்க்' அவசியம்மேட்டுப்பாளையம் ரோட்டில், நான்காவது குடிநீர் குழாய் பதித்த பகுதிகளில், உடனடியாக 'பேட்ஜ் ஒர்க்' செய்ய வேண்டும்.-பி.கமலம், கருவலுார்.தண்ணீர் விரயம் ஊத்துக்குளி ரோடு, குருவாயூரப்பன் கோவில் அருகே, குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால், தண்ணீர் வீணாகிறது.- ஆர்.காமாட்சி, சபாபதிபுரம்.ஒளிராத தெரு விளக்குதிருப்பூர், சிவன் தியேட்டர் ரோடு ஒட்டிய வீதியில், தெருவிளக்குகள் ஒளிராததால், இருள் சூழ்ந்துள்ளது; மக்கள் அச்சமடைகின்றனர்.- எஸ்.தனலட்சுமி, சிவன்தியேட்டர் ரோடு.போக்குவரத்து நெரிசல் திருப்பூர், முனிசிபல் வீதியில், விதிமீறி நிறுத்தப்படும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.- எல்.கண்ணன், கரட்டாங்காடு.ரோட்டில் கழிவுநீர்திருப்பூர் அடுத்த வேப்பமர பஸ் ஸ்டாப் முதல், ஆர்.எஸ்., ஊத்துக்குளி வரையிலான ரோட்டில், சாக்கடை கழிவுநீர் வழிந்தோடி, சுகாதாரம் பாதிக்கிறது. - ஆர்.பழனிசாமி, ஊத்துக்குளி.குப்பை தேக்கம் குமாரானந்தபுரம், எல்.ஜி., கிரவுண்ட் பகுதியில், குடியிருப்புவாசிகளால் கொட்டப்படும் குப்பை, முறையாக அகற்றப்படுவதில்லை.- டி.கார்த்திக், குமாரானந்தபுரம்.அடிக்கடி விபத்துபூலுவப்பட்டியில் இருந்து கூலிபாளையம் செல்லும் ரோடு, பல இடங்களில் சேதமாகியுள்ளதால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.-எஸ்.விஜயலட்சுமி, பூலுவப்பட்டி.ஆக்கிரமிப்பால் இடையூறு1. பல்லடம் ரோடு, ஆர்.வி.இ., லே -அவுட் பகுதியில், ஆக்கிரமிப்பால், ரோடு குறுகலாகியுள்ளது.- ஏ.குமரேசன், திருப்பூர்.2. மங்கலம் நால்ரோடு பகுதியில், ஆக்கிரமிப்பை அகற்றி, ரோடு விரிவுபடுத்த வேண்டும்.-பி.சுந்தரேசன், சுல்தான்பேட்டை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE