பொது செய்தி

தமிழ்நாடு

சுனாமி நினைவு தினம்

Added : டிச 28, 2020
Share
Advertisement
கிள்ளை : சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு கிள்ளை கடற்கரையோர மீனவ கிராம மக்கள், முன்னாள் அமைச்சர் கலைமணி தலைமையில், அஞ்சலி செலுத்தினர்.சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு கிள்ளை, பட்டரையடி, பில்லுமேடு, சின்னவாய்க்கால் கிராமங்களை சேர்ந்த மீனவ மக்கள் ஊர்வலமாக சென்று அந்தந்த பகுதிகளில் உள்ள சுனாமி நினைவு இடத்தில் அஞ்சலி செலுத்தினர். அதே போல், பிச்சாவரம் சுற்றுலா

கிள்ளை : சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு கிள்ளை கடற்கரையோர மீனவ கிராம மக்கள், முன்னாள் அமைச்சர் கலைமணி தலைமையில், அஞ்சலி செலுத்தினர்.

சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு கிள்ளை, பட்டரையடி, பில்லுமேடு, சின்னவாய்க்கால் கிராமங்களை சேர்ந்த மீனவ மக்கள் ஊர்வலமாக சென்று அந்தந்த பகுதிகளில் உள்ள சுனாமி நினைவு இடத்தில் அஞ்சலி செலுத்தினர். அதே போல், பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் கிள்ளை ஆற்றில், முன்னாள் அமைச்சர் கலைமணி, முன்னாள் மீனவர் நல வாரிய உறுப்பினர் சத்தியமூர்த்தி தலைமையில், மலர் அஞ்சலி செலுத்தினர்.மாவட்ட துணை செயலர் தேன்மொழி காத்தவராயசாமி, கிராம தலைவர்கள் தேவநாதன், கோவிந்தன், சங்கர், கலைதமிழன், படகு உரிமையாளர்கள் சங்க தலைவர் மதியழகன், மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் காளியப்பன், மீனவர் கூட்டுறவு சங்க மகளிரணி தலைவி சங்கேஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X