பொது செய்தி

தமிழ்நாடு

இளைஞர் தேசிய விழா போட்டியில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு

Added : டிச 28, 2020
Share
Advertisement
கடலுார் : தேசிய இளைஞர் விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான போட்டிகள் வரும் 29, 30 ஆகிய தேதிகளில் நடக்கிறது.கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:இந்திய அரசின் விளையாட்டுத் துறை அமைச்சகம் ஆண்டுதோறும் விவேகானந்தர் பிறந்த நாளை இளைஞர் தேசிய விழாவாக கொண்டாடுகிறது.இந்தாண்டு மத்திய அரசின் வழிகாட்டுதல்படி தமிழக அரசின் விளையாட்டுத் துறை சார்பில் விவேகானந்தர் பிறந்த நாளை

கடலுார் : தேசிய இளைஞர் விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான போட்டிகள் வரும் 29, 30 ஆகிய தேதிகளில் நடக்கிறது.

கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:இந்திய அரசின் விளையாட்டுத் துறை அமைச்சகம் ஆண்டுதோறும் விவேகானந்தர் பிறந்த நாளை இளைஞர் தேசிய விழாவாக கொண்டாடுகிறது.

இந்தாண்டு மத்திய அரசின் வழிகாட்டுதல்படி தமிழக அரசின் விளையாட்டுத் துறை சார்பில் விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான போட்டிகள் வரும் 29, 30ம் தேதியும், மாநில அளவிலான போட்டிகள் ஜனவரி 5 முதல், 8ம் தேதி வரையும், தேசிய அளவிலான போட்டிகள் 12ம் தேதி முதல், 19ம் தேதி வரையும் நடக்கிறது.

கடலுார் மாவட்ட அளவிலான போட்டிகள் மெய்நிகர் நடைமுறையின் மூலமாக வரும் 29, 30 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இதில், 15 வயது முதல் 29 வயதுக்குட்பட்ட பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் மாணவர் அல்லாதோர் பங்கேற்கலாம். இசை, நடனம், உடை அலங்காரம், நாடகம், காட்சிக் கலைகள், எழுத்தாற்றல், பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடக்கிறது.

போட்டியாளர்கள் தங்களுடைய போட்டிக்கான பதிவை தெளிவான ஒளி, ஒலி அமைப்போடு பதிவு செய்து, உறுதிமொழி படிவத்தோடு வரும் 29ம் தேதி மற்றும் 30ம் தேதி மாலை 5:00 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலக மின்னஞ்சல் முகவரியான dsocud@gmail.com என்ற முகவரியிலும் பதிவு செய்யப்பட்ட 'சிடி'யில் நேரிலும் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை 04142-220590 என்ற எண்ணில் தெரிந்து கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X