கடலுார் : அ.தி.மு.க., அரசின் சாதனைகளை உடனுக்குடன் மக்களுக்கு, தகவல் தொழில்நுட்ப பிரிவினர் எடுத்து செல்ல வேண்டும் என, அமைச்சர் சம்பத் பேசினார்.
அ.தி.மு.க., கடலுார் மத்திய மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசனை கூட்டம், பாதிரிகுப்பம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. கோவை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கடலுார் வடக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஆனந்தகுமார் வரவேற்றார். நகர குமரன், தெற்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, மத்திய மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வெங்கட்ராமன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அமைச்சர் சம்பத் பேசியதாவது:தகவல் தொழில்நுட்ப பிரிவு கட்சியின் முதுகெலும்பாக உள்ளது. இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் செய்திகள் உடனுக்குடன் சமூக வலைதளங்களில் தீயாய் பரவுகிறது.எனவே, தகவல் தொழில்நுட்ப பிரிவினர் கட்சி தலைமை சொல்லும் அறிவிப்புகளையும், அ.தி.மு.க., அரசின் சாதனைகளையும் உடனுக்குடன் பொது மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். சமூக வலைதளம் என்ற அறிவியல் வளர்ச்சியை முழுமையாக பயன்படுத்தி கட்சியை மேம்படுத்த வேண்டும்.
தேர்தல் வருவதற்கு இரண்டு மாதங்களே உள்ளன. போட்டிகள் மிகுந்த இந்த உலகில் வெற்றிபெற உடனுக்குடன் நமது கருத்துக்களை பரப்ப வேண்டும். கடலூர் மத்திய மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் சேவல் குமார், விவசாய பிரிவு காசிநாதன், மீனவர் பிரிவுச் செயலாளர் தங்கமணி, அண்ணா தொழிற்சங்க பேரவை பாலகிருஷ்ணன், மாணவரணி செயலாளர் கலையரசன், இளைஞரணி மாதவன், கடலுார் ஒன்றியக்குழு தலைவர் பக்கிரி, நகர துணை செயலாளர் கந்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.தகவல் தொழில்நுட்பபிரிவு நகர செயலாளர் கவுதம் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE