ஊராட்சி தலைவர் விவகாரம்; உண்ணாவிரதம் நடத்த முடிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி தலைவர் விவகாரம்; உண்ணாவிரதம் நடத்த முடிவு

Added : டிச 28, 2020
Share
நடுவீரப்பட்டு : குமளங்குளம் ஊராட்சி தலைவரை நியமிக்காத விவகாரத்தில் கிராம மக்கள் இன்று உண்ணாவிரதம் நடத்த முடிவு செய்துள்ளனர்.கடலுார் ஒன்றியம், குமளங்குளம் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜெயலட்சுமி ஆட்டோ சின்னத்தில் 2,524 ஓட்டுகளும், விஜயலட்சுமி பூட்டு சாவி சின்னத்தில் 1,478 ஓட்டுகளும் பெற்றனர்.ஆனால் விஜயலட்சுமி வெற்றி பெற்றதாக பெயரை மாற்றி அறிவித்தனர். இதனால்

நடுவீரப்பட்டு : குமளங்குளம் ஊராட்சி தலைவரை நியமிக்காத விவகாரத்தில் கிராம மக்கள் இன்று உண்ணாவிரதம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

கடலுார் ஒன்றியம், குமளங்குளம் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜெயலட்சுமி ஆட்டோ சின்னத்தில் 2,524 ஓட்டுகளும், விஜயலட்சுமி பூட்டு சாவி சின்னத்தில் 1,478 ஓட்டுகளும் பெற்றனர்.ஆனால் விஜயலட்சுமி வெற்றி பெற்றதாக பெயரை மாற்றி அறிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயலட்சுமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, குமளங்குளம் ஊராட்சி தலைவர் தேர்தலில் ஜெயலட்சுமி வெற்றி பெற்றதாக ஒருவாரத்தில் அறிவிக்க தேர்தல் ஆணையத்திற்கு கடந்த அக்., 28ம் தேதி உத்திரவிட்டார். இரண்டு மாதங்களாகியும் ஊராட்சி தலைவர் நியமிக்கப்படவில்லை. இதனையடுத்து, ஊராட்சி தலைவரை நியமிக்க வலியுறுத்தி குமளங்குளம் ஊராட்சி மக்கள் இன்று காலை நடுவீரப்பட்டில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X