விருத்தாசலம் : 'தினமலர்' செய்தி எதிரொலியால், புதர் மண்டி கிடந்த மினி விளையாட்டு மைதானம், கலைச்செல்வன் எம்.எல்.ஏ.,வின் தொகுதி நிதியில் சீரமைக்கும் பணி நடக்கிறது.
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லுாரி அருகே உள்ள மினி விளையாட்டு மைதானம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் கடந்த 10 ஆண்டு களுக்கு முன் துவங்கப்பட்டது. இதில் ஓட்டம், கால்பந்து, வாலிபால், பேட் மிட்டன், ெஷட்டில் உள்ளிட்ட பலவிதமான ஆடுகளங்கள் மற்றும் உடற்பயிற்சி கூடம் உள்ளன. 400 மீட்டர் தொலைவிற்கு ஓட்டம், நடைபயிற்சி மேற்கொள்ள ஓடு பாதை அமைக்கப்பட்டது.
விருத்தாசலம் நகரத்தில் உள்ள முதியவர்கள், இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் தினசரி நடை பயிற்சி மேற் கொள்வது வழக்கம். கிராமப்புற இளைஞர்கள், போலீஸ், ராணுவம் உள்ளிட்ட உடற்தகுதி தேர்வுகளுக்கு, இந்த மைதானத்தில் பயிற்சி மேற்கொள்கின்றனர்.கடந்த ஓராண்டுக்கும் மேலாக மைதானம் பராமரிப்பின்றி ஓடுதளம் இருந்த தடமே தெரியாமல் புதர்மண்டி இருந்தது.
மழைக் காலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், மைதானத்தில் ஆங்காங்கே மண் அரிப்பு ஏற்பட்டு குண்டும் குழியுமாக இருந்தது.மினி விளையாட்டு மைதானத்தை சீரமைக்க வேண்டுமென 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. அதைத்தொடர்ந்து, புதர் மண்டி கிடந்த விளையாட்டு மைதானம், கலைச்செல்வன் எம்.எல்.ஏ., வின் சொந்த நிதியில், சீரமைக்கும் பணி நடக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE