திருப்பூர்:தண்டவாள பராமரிப்பு பணியால், 8 நாட்களுக்கு, எர்ணாகுளம் - பாட்னா எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்படுகிறது.ஆந்திர மாநிலம், ராஜமுண்டரி ரயில்வே ஸ்டேஷனில் உள்ள 'யார்டு' மாற்றியமைக்கும் பணி நடக்கிறது. இதனால், எர்ணாகுளம் - பாட்னா சிறப்பு ரயில், இன்றும், நாளையும் ரத்து செய்யப்படுகிறது. மீண்டும், வரும் ஜன., 4 மற்றும், 5ம் தேதி ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, பாட்னாவில் புறப்படும் ரயில், இம்மாதம், 31ம் தேதி, ஜன., 1,7 மற்றும், 8ம் தேதி நிறுத்தப்படுகிறது.நேரம் மாற்றம்!சென்னை - கோவை எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரம், இன்று முதல் மாற்றப்படுகிறது. வழக்கமாக, 02:05 மணிக்கு கோவை வந்தடையும் ரயில், இனி, 2:15 மணிக்கு கோவை வரும். சென்னை - கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் இரவு, 9:45 க்கு பதில், 9:40 மணிக்கு, கோவை வடக்கு ஸ்டேஷன் வந்து சேரும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE