லாரி மோதி விவசாயி பலி

Added : டிச 28, 2020
Share
Advertisement
பொங்கலுார் முதியாநெரிசலை சேர்ந்தவர் பாலசுப்ரமணி, 53; விவசாயி. இவர் நேற்று மதியம் கோவை ---- திருச்சி ரோடு தாயம்பாளையம் பிரிவு அருகே டூ வீலரில் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி வந்த லாரி மோதியது. ஹெல்மெட் அணிந்திருந்தும் வேகமாக லாரி மோதியதால் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.தீ விபத்தில் மூதாட்டி பலிதாராபுரத்தில், சமையல்

பொங்கலுார் முதியாநெரிசலை சேர்ந்தவர் பாலசுப்ரமணி, 53; விவசாயி. இவர் நேற்று மதியம் கோவை ---- திருச்சி ரோடு தாயம்பாளையம் பிரிவு அருகே டூ வீலரில் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி வந்த லாரி மோதியது. ஹெல்மெட் அணிந்திருந்தும் வேகமாக லாரி மோதியதால் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.தீ விபத்தில் மூதாட்டி பலிதாராபுரத்தில், சமையல் செய்து கொண்டிருந்த போது ஏற்பட்ட தீ விபத்தில், மூதாட்டி இறந்தார். தாராபுரம், பொன்னபுரத்தை சேர்ந்தவர் கோவிந்தம்மாள், 90. தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் சமையல் செய்து கொண்டிருந்தார். எதிர்பாரா விதமாக ஆடையில் தீ பிடித்தது. தீக்காயத்துடன் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று காலை இறந்தார். விபத்து; வாலிபர் பலிதிருப்பூரை அடுத்த தாராபுரம், தளவாய்பட்டினத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், 26; டிரைவர். இவரது நண்பர் மகுடீஸ்வரன், 29. இருவரும், நேற்று காலை டூவீலரில் திருப்பூரை நோக்கி சென்றனர். குண்டடம் மூனு ரோடு அருகே சென்ற போது அடையாளம் தெரியாத கார், டூவீலர் மீது மோதி, நிற்காமல் சென்றது. விபத்தில், கோபாலகிருஷ்ணன் சம்பவ இடத்தில் இறந்தார். மற்றொருவர், தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.கூலி தொழிலாளி பலிபொங்கலுார் வலையபாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி, 48; கூலி தொழிலாளி. அதே ஊரை சேர்ந்த ராமசாமி, 40. இருவரும் பைக்கில் பல்லடத்தில் இருந்து புத்தரச்சல் நோக்கி சென்றனர். பொங்கலுார் கள்ளிப்பாளையம் அருகே, பல்லடம் நோக்கி சென்ற கார் மோதியதில் கோவிந்தசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த ராமசாமி திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X