பல்லடம்:'சட்டத்தை இயற்றுபவர்களே தவறிழைக்கின்றனர்' என, பயிற்சி முகாமில் தெரிவிக்கப்பட்டது.பல்லடம் வட்டார சமூக ஆர்வலர் கூட்டமைப்பின் சார்பில், தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த பயிற்சி முகாம் நடந்தது. கூட்டமைப்பின் தலைவர் அண்ணாதுரை தலைமை வகித்தார். செயலாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். கன்ஸ்யூமர் கேர் அசோசியேஷன் மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் வரவேற்றார்.தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்கத்தின் பொது செயலாளர் மதியழகன் பேசியதாவது;சட்டத்தை இயற்றும் ஆட்சியாளர்களும், அதிகாரிகளுமே அவற்றை பின்பற்ற தவறுகின்றனர். ஆட்சியாளர்களை கேள்வி கேட்க, தவறுகளை சுட்டிக்காட்ட, தகவல் அறியும் உரிமை சட்டம் பயன்படுகிறது.ஆனால், அதை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மிகக்குறைவு. ஆண்டுக்கு, 25 ஆயிரம் மனுக்களே விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. தகவல் அறியும் உரிமை சட்டம் என்பது குடிமக்களின் சிறந்த ஆயுதம். ஊழல் தடுப்புத்துறை சரியாக பணியாற்றினால், ஊழல் முறைகேடு நடக்காது.இவ்வாறு அவர் பேசினார். பல்வேறு இயக்கங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து பேசினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE