பொது செய்தி

தமிழ்நாடு

'கவர்மென்ட் ஆபீஸ்ல லஞ்சத்தை ஒழிங்கய்யா' வாசகர் தேர்தல் அறிக்கை-1

Added : டிச 28, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்து அறிக்கை வெளியிட்டு ஆட்சிக்கு வந்ததும் அவை எப்போதுமே 'புஸ்வாணம்' ஆகி நாம் பார்த்திருக்கிறோம். மக்கள் தேவையை மனதில் வைத்து அவை தயாரிக்கப்படுகிறதா அல்லது அரசியல்வாதிகளின் 'தேவை'களை வைத்துத் தயாரிக்கப்படுகிறதா என்ற சந்தேகம் எல்லார் மனதிலும் எப்போதுமே எழும்; அவ்வளவு 'தரமான' நிர்வாகத்தை திராவிட கட்சிகள் தந்து
 'கவர்மென்ட் ஆபீஸ்ல லஞ்சத்தை ஒழிங்கய்யா' வாசகர் தேர்தல் அறிக்கை-1

அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்து அறிக்கை வெளியிட்டு ஆட்சிக்கு வந்ததும் அவை எப்போதுமே 'புஸ்வாணம்' ஆகி நாம் பார்த்திருக்கிறோம். மக்கள்
தேவையை மனதில் வைத்து அவை தயாரிக்கப்படுகிறதா அல்லது அரசியல்வாதிகளின் 'தேவை'களை வைத்துத் தயாரிக்கப்படுகிறதா என்ற சந்தேகம் எல்லார் மனதிலும்
எப்போதுமே எழும்; அவ்வளவு 'தரமான' நிர்வாகத்தை திராவிட கட்சிகள் தந்து வந்திருக்கின்றன. எனவே மக்களின் தேவையை அவர்களிடமே கேட்போமே என நினைத்து
நம் நாளிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அடுத்த ஒரு வாரத்திற்குள் ஆயிரக்கணக்கான தேர்தல் அறிக்கைகளை எழுதி வாசகர்கள் குவித்து விட்டனர். பல கடிதங்கள்
ஒத்த கருத்துடையவையாக இருந்ததால் அது போன்ற கடிதங்கள் தவிர மற்ற அனைத்தும் இங்கே வெளியிடப்படுகின்றன. இ - மெயில், நேரடி கடிதம், டெலிகிராம் மூலம்
குவிக்கப்பட்ட அறிக்கைகள் தொகுக்கப்பட்டுள்ளன.

- ஆசிரியர்.அனைத்து மட்டத்திலும் லஞ்சம் பெறுவோரின் உடைமைகளைப் பறிக்க வேண்டும்; தனியார் கல்விக் கூடங்கள் வசூல் செய்யும் கட்டணங்களை ஒழுங்குமுறைப்படுத்த வேண்டும்; வசதியற்றவர்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை நியாயமான செலவில் கிடைக்க வேண்டும்; வயதான பெற்றோரை உதாசீனப்படுத்தும் மக்களை வழிப்படுத்த சட்டங்கள் வேண்டும்.

- த.கண்ணன், உத்தங்குடி, மதுரை.

பணிவு, ஒழுக்கம், கலாசாரம் போன்ற நல்லொழுக்க நெறிகளை பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும்; கொள்ளையடிக்கும் போலீசாரின் பதவியைப் பறிக்க வேண்டும்; ரேஷனில் தரமில்லாத அரிசியை இலவசமாக கொடுப்பதற்கு பதில் நல்ல அரிசியை மானிய விலையில் கொடுக்கலாம் அல்லது ரேஷன் கடையையே பல்பொருள் அங்காடியாக மாற்றலாம்; நெடுஞ்சாலை மோட்டல் முதலாளிகள் - பஸ் டிப்போ மேனேஜர் - அரசியல்வாதிகளின் கூட்டுக் கொள்ளையைத் தடுக்க வேண்டும்.

- கார்த்திகேயன், திருப்பூர்.


எந்த ஒரு அரசு விழா தொடர்பான நிகழ்வாக இருந்தாலும் முதல்வர், அமைச்சர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் அரசு அதிகாரிகள் அனைவருமே 'வீடியோ கான்பரன்ஸ்' மூலமாகவே நிர்வாக நடவடிக்கை மேற்கோள்ள வேண்டும்; கலெக்டருக்கு கூடுதல் அதிகாரம் கொடுத்து அரசு அலுவல் விஷயமாக தலைநகருக்கு மக்கள் படையெடுப்பதைத் தடுக்க வழி செய்ய வேண்டும்.


- சி.கார்த்திகேயன், சாத்துார், விருதுநகர் மாவட்டம்.


பொதுக் கழிப்பறைகள் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்; நிலப் பதிவு முறை லஞ்சமில்லாமல் நடக்க வேண்டும்; மக்களின் அத்தியாவசிய சான்றிதழ் உடனுக்குடன் இலவசமாய் கிடைக்க வேண்டும்; அரசின் சேவைகளுக்கு நேரம் காலம் நிர்ணயிக்க வேண்டும்; தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு தண்டனை கொடுக்க வேண்டும்.

- சங்கர், ராயப்பேட்டை , சென்னை.


தனியார் நிறுவனங்களில் ஊழல்கள் சொல்லி மாளாது; அதற்கு சட்டம் இயற்றப்பட வேண்டும். ஜாதிப் பெயரில் உள்ள கட்சிகளுக்கு தடை போட வேண்டும். இளைஞர்கள் படித்து முடித்ததும் இரண்டு ஆண்டுகள் கட்டாயமாக ராணுவத்தில் பணியாற்ற வேண்டும்.

- சி.முருகன், திருப்பூர்.


எதிலும் வெளிப்படைத்தன்மை இன்றைய முக்கிய தேவை. அரசு இயந்திரம் அதற்கேற்றபடி மாற்றியமைக்கப்பட வேண்டும்.

- ராம், சென்னை.


தொட்டதற்கெல்லாம் போராட்டம் நடத்துவதை முற்றிலும் தடை செய்யுங்களேன் ப்ளீஸ்!

- சுந்தரம், பூசாரி.


கிராம நிர்வாகத்தை உயிரோட்டம் உள்ளதாக ஆக்க வேண்டும். 'மைக்ரோ லெவல்' நிர்வாகத்தை அமல்படுத்த வேண்டும்.

- பேபி ராஜேஷ்.

இலவசம் எதுவும் தர வேண்டாம்; வயதானவர்களுக்கு பண உதவி மற்றும் அவர்கள் எதற்கும் திண்டாடாத நிலை ஏற்படுத்த வேண்டும்; கணவனால் கைவிடப்பட்ட அல்லது கணவனை இழந்த பெண்களுக்கு உதவிகளை அதிகரிக்க வேண்டும்; மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்களை உடனடியாக சிறைக்கு அனுப்ப வேண்டும், லைசன்சை ரத்து செய்ய வேண்டும்; திருட்டு மற்றும் வழிப்பறிகளைத் தடுக்க போலீசார் போதாது பொதுமக்களின் பங்களிப்பும் வேண்டும்; கோவில்களில் மாற்று மதத்தினரை பணியமர்த்தக் கூடாது; மதம் மாற்ற முயற்சி செய்பவருக்கு மக்கள் அறியும் வகையில் தண்டனை வழங்க வேண்டும்; தரமான இலவச அரசு மருத்துவமனைகள் துவக்கப்பட வேண்டும்; தேர்தலில் போட்டியிடும் அரசியல்வாதிகளின் சொத்து விபரத்தையும் வம்பு வழக்குகளையும் 'ஆதார், பான்' உதவியுடன் அரசே வெளியிட வேண்டும்.

- விஜயா ஹேத்திராஜன்


ஒரே தேசம், ஒரே தேர்தல் கட்டாயமாக்க பட வேண்டும்; லஞ்சம், கையூட்டு பெறுபவர்களின் சொத்துக்கள் தேசத்துக்கு சொந்தமாக்க பட வேண்டும்; அவர்களின் பட்டங்கள் பறிக்கப்பட வேண்டும். அவர்களின் குடும்பத்தாருக்கான ஆதார் மற்றும் அடையாள அட்டைகளில் சமுதாய குற்றவாளிகள் என்று முத்திரை குத்த வேண்டும். கட்டபஞ்சாயத்து, கந்து வட்டி முறைகள் ஒழிக்க பட வேண்டிய விசயமாகும்.

- பாண்டியராஜன், பட்டிவீரன்பட்டி.

பக்கிங்ஹாம் கால்வாயில் நீர் வழி போக்குவரத்து உருவாக்க வேண்டும்; ஆசிரியர்களின் தரம் குறைந்ததால் மாணவர்கள் 'யு டியூப்' சேனல் பக்கம் போகின்றனர். அதனால் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு நடத்த வேண்டும். அதில் தேர்ச்சி அடையாதவர்களுக்கு மூன்று வாய்ப்புகள் வழங்க வேண்டும். அதிலும் தேர்ச்சி அடையாதவர்களை வேலையை விட்டு நீக்க வேண்டும். இந்த நடைமுறை சில மேலைநாடுகளில் உள்ளது. ஒப்பந்த தொழிலாளர்களின் நலன் காக்க வேண்டும். தொழிற்படிப்புகளை ஊக்குவிக்க வேண்டும்.

- கோகுல கண்ணன்


அரசியல் கட்சிகளில் பின்பற்றப்படும் நடைமுறைகளைச் சீர்படுத்த வேண்டும். வாரிசு அரசியலே கூடாது. பணம் தேவைப்படின் மக்களை மிரட்டி வாங்கும் நடைமுறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.

- ர.முத்துசாமி, மயிலாடுதுறை

பல்கலைகளைத் தரமுள்ளதாக மாற்றி துணைவேந்தர் முதல் ஆசிரியர்கள் வரையிலான நியமனங்கள் அனைத்தும் வெளிப்படையாக்கப்பட வேண்டும். அறநிலையத் துறையை கலைக்க வேண்டும்.

- பெயர் ஊர் தெரிவிக்காத வாசகர்.

அனைவருக்கும் சம நீதி வேண்டும் என்ற வகையில் இட ஒதுக்கீடு கொள்கையில் ஜாதிவாரியாக 25 சதவீதம், பொருளாதார அடிப்படையில் அனைத்து சாதியினருக்கும் 25 சதவீதம், பொதுப் பிரிவுக்கு 50 சதவீதம் என மாற்றி அமைக்கலாம்.

- அ.கோமதி நாயகம்


லஞ்சம் இல்லாத அரசு அலுவலகங்கள், 'அதிகாரி' என்ற சொல்லை 'சேவையாளன்', என மாற்றுதல்; குழந்தைகளுக்கு சாதி, மதம் தவிர்த்த பிறப்பு சான்றிதழ் வழங்குதல்; தாய்மொழிக் கல்வியுடன் பிற மொழிப் பேச்சுப் பயிற்சி வழங்குதல்; நம் நாட்டில் நமக்கு முன்னுரிமை.

- சே.சுபாஷ்துரை, திண்டுக்கல்.

அரசியல்வாதிகள் வாகனங்களில் கட்சி கொடிகளை அகற்ற வேண்டும்; கமர்ஷியல் வாகனம் வாங்கும் அனைவருக்கும் ஜி.எஸ்.டி. ரெஜிஸ்டர் செய்து கொடுக்க வேண்டும்; டீ கடைகளில் பாய்லர் இல்லை என்றால் அவர்கள் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.

- மனோகரன்,சோழிங்கநல்லூர் சென்னை.


பஸ் வசதி இல்லாத கிராமங்களில் ஓடும் மினி பஸ்கள் போதுமான அளவு இல்லை; சரி செய்ய வேண்டும். வெளிநாடுகளில் உள்ளது போல் முதியோருக்கு ஊதியம், மருத்துவ வசதி தேவை.

- லட்சுமணன், ஆழ்வார் திருநகர் சென்னை.


சாலைகளை வெட்டும்போது சம்பந்தப்பட்ட அரசு துறைகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.


வி.சுந்தரேஷ்வரன், இன்ஜினியர், பெருங்குடி சென்னை.


ஆட்டோ கட்டணங்கள் குறைக்கப்பட வேண்டும். முதியோர் அதிகம் பேர் ஆட்டோ பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும்.

- எஸ்.ராமச்சந்திரன்,பெசன்ட்நகர் சென்னை.

அரசுக்கு புகார் தெரிவிக்க இணையதளம் வேண்டும்; அது சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும்; இரண்டு நாட்களுக்குள் பிரச்னை சரி செய்யப்பட வேண்டும்.

- சிவநாத், ஆழ்வார் திருநகர் சென்னை.

வார்டு / தெரு வாரியாக பொதுமக்கள் குறைகளை கேட்டு உதவி செய்ய தகுதி வாய்ந்த நபர்களை நியமிக்க வேண்டும்.

- எஸ்.சந்திரன், வேலுார்


ஊழலுக்கு எதிராக முதலில் பத்திரப்பதிவு அலுவலக பகுதியில் இருக்கும் புரோக்கர்களை அப்புறப்படுத்த வேண்டும். ஊழல் இங்கே தான் முதலில் ஆரம்பித்து உள்ளது.

- எ.லட்சுமிநாராயணன், சிட்லபாக்கம் சென்னை.

சாலைகளை, முட்டு சந்துகளை, தெருக்களை அசிங்கப்படுத்தும் பேனர்களும், போஸ்டர்களும் முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும்.


- முத்து சுப்ரமணியம், நங்கை நல்லூர், சென்னை.


பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்தல்; லஞ்சத்தை அறவே ஒழித்தல்; தொழில் துறையில் படிப்படியான முன்னேற்றம்.

- ராஜலட்சுமி காசி விஸ்வநாதர் சன்னதி, அயன்புரம் சென்னை.


மாதா மாதம் மின் அளவீடு செய்து வசூல் செய்ய வேண்டும்; நதி நீர் இணைப்பு; நீர் நிலை பராமரிப்பு.

- ஜீவா காமராஜ், சுவாமிமலை


அரசு பள்ளிகளில் கட்டட அமைப்புகளை சீரமைக்க வேண்டும்.

- அ.மாலா, போரூர், சென்னை.

ஜாதியை ஒழிங்கய்யா!

பேராசிரியர் - பெரிய கிருஷ்ணமூர்த்தி, புதுச்சேரி.

கோவில்களைப் பாதுகாக்க வேண்டும்.

ராஜகுமார், சென்னை.

ராணுவத்தில் சமத்துவம் வேண்டும்.

- பொன்னழகு, திருவண்ணாமலை.

'மேக் இன் தமிழ்நாடு!'
- வீரசப தாஸ்
அஜித் தாஸ்
மும்மொழிக் கொள்கை மிக மிக அவசியம்.

- விஜயபிரியா

டவுரி இன்னும் ஒழியலியேங்க!

எம்.மீனா. சிவகங்கை


ஆர்.டி.ஐ. போட ஆன்லைன் வசதி வேண்டும்.

- ஆர்.அரிச்சந்திரன், தென்காசி.


ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலைகளைச் சுத்தம் செய்து நல்லாட்சி தர வேண்டும்.

- குமார், சென்னை.


ஒரே நாடு; ஒரே பாடத் திட்டம் வேண்டும்.

- பாலமுருகேசன், கோவைப்புதூர் கோவை.

ரேஷன் பொருட்களை தரமுள்ளதாகக் கொடுங்களேன்.

எம்.செல்வா சென்னை.


தற்போதைய நடைமுறை நன்றாக இருந்தாலும் சீராக கண்காணிக்கப்படுவதில்லை. அதிகாரிகள் ஊழலில் திளைக்கின்றனர். கவனம் செலுத்த வேண்டும்.

- கர்னல் சி.வேணுகோபால்.

மழை நீர் வடிகால்கள், மின் சாதனங்கள் ஆகியவை சாலைகளில் இன்றியமையாதவை. அவற்றை முறையாகப் பராமரிக்க வேண்டும்.

சீ.ராமன், சென்னை

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
m.viswanathan - chennai,இந்தியா
28-டிச-202022:48:11 IST Report Abuse
m.viswanathan கேட்பதற்கு நன்றாக உள்ளது . லஞ்சம் வாங்கியதாக தெரிந்தால் தண்டிக்க பட வேண்டும் , புறங்கையை கட்டி , நடு முச்சந்தியில் , சாணியை கரைத்து குடிக்க வைத்து செருப்பால போவோர் , வருவோர் அடித்தால் ஒரு பயம் வரும்
Rate this:
Cancel
தமிழ்வேள் - THIRUVALLUR,இந்தியா
28-டிச-202020:14:09 IST Report Abuse
தமிழ்வேள் திருப்பூர் சி. முருகன் சொல்வது உண்மை .. அரசு ஊழியராவது ஊழலில் சிக்கி தண்டனையடைந்தால் பென்சன் வில்லங்கமடையும் என்ற பயம் உடையவர்கள் ...ஆனால் தனியார் துறையில் அது கிடியாவேகிடையாது ..கொள்ளை அடிப்பவன் , மேலதிகாரிக்கு சரியாக பங்கு கொடுத்தால் , அடுத்த பதவி உயர்வும் கிடைக்கும் ....ஒரே பிரச்சினை - ஊழலை போட்டுக்கொடுக்கும் ஊழியனுக்கு வேலை காலி ...ஊழல் செய்பவனால் நிர்வாகத்துக்கு பயனில்லை என்றால்தான் நடவடிக்கை பாயும் ....பிரிட்டிஷ் , பிரெஞ்சு ஈஸ்ட இந்தியா கம்பெனிகளின் மன நிலையில்தான் இவர்கள் இன்னும் இருக்கிறார்கள் .....வெளியே தெரியாத ஊழல்கள் மிக அதிகம் ....இவர்கள் மீதுள்ள அதீத நம்பிக்கையால் ஊழல்களை யாரும் நம்புவதில்லை .. அதுதான் இவர்களது பாதுகாப்பு .......
Rate this:
Cancel
HARI - CHENNAI,இந்தியா
28-டிச-202018:10:08 IST Report Abuse
HARI தயவு செய்து மின் கட்டணத்தை பிரதி மாதம் வசூல் செய்தால் நடுத்தர குடும்பத்திற்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X