சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மருத்துவமனை மாடியில் இருந்து குதித்த பெண்

Added : டிச 28, 2020
Share
Advertisement
கோவை:தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண், மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மேட்டுப்பாளையம் புளூஹில் அவென்யூவை சேர்ந்த பிரபுவின் மனைவி யோகப் பிரியா, 27. உடல்நலக் குறைவுக்காக நேற்று முன்தினம், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு உடல் நலம்

கோவை:தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண், மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மேட்டுப்பாளையம் புளூஹில் அவென்யூவை சேர்ந்த பிரபுவின் மனைவி யோகப் பிரியா, 27. உடல்நலக் குறைவுக்காக நேற்று முன்தினம், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு உடல் நலம் தேறியது.இந்நிலையில், அவர் நேற்று அதிகாலை, 3:00 மணியளவில், மருத்துவமனையின் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்தார். பலத்த காயமடைந்த அவரை மருத்துவமனை ஊழியர்கள் மீட்டு, மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். பீளமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X