பொது செய்தி

தமிழ்நாடு

முன்னாள் மாணவர் சந்திப்பில் நெகிழ்ச்சி

Added : டிச 28, 2020
Share
Advertisement
கோவை:செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியின், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு உட்பட முப்பெரும் விழா, நேற்று நடந்தது.விழாவில், சிறப்பு விருந்தினரும், பள்ளியின் தலைமையாசிரியருமான தேவசகாயம் பேசுகையில், '' கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு பின், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடக்கிறது. தன்னிடம் படித்த மாணவர்கள், நல்ல நிலைக்கு முன்னேறியிருப்பதை காண்பது தான்,

கோவை:செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியின், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு உட்பட முப்பெரும் விழா, நேற்று நடந்தது.விழாவில், சிறப்பு விருந்தினரும், பள்ளியின் தலைமையாசிரியருமான தேவசகாயம் பேசுகையில், '' கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு பின், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடக்கிறது. தன்னிடம் படித்த மாணவர்கள், நல்ல நிலைக்கு முன்னேறியிருப்பதை காண்பது தான், ஆசிரியர்களுக்கான ஆத்ம திருப்தி. அந்த வகையில், மாணவர்கள் குழுமியிருப்பதை காண்பதற்கு, மிகுந்த மனநிறைவாக உள்ளது. பள்ளியின் அடையாளமாக உள்ள, முன்னாள் மாணவர்கள் இனி ஆண்டுதோறும் சந்திப்பதோடு, பள்ளியின் செயல்பாடுகளில், பங்கெடுத்து கொள்ள வேண்டும்,'' என்றார்.விழாவில், செல்வபுரம் மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியை தனலட்சுமி, நிலக்கிழார்கள் மணி மருதாசலம், ஆறுமுக சந்திரமோகன் உள்ளிட்ட, பலர் பங்கேற்றனர். பள்ளிக்கு தேவையான உபகரணங்கள் வாங்கி தர, நிதி திரட்டுவது குறித்து, விழாவில் விவாதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X