கோவை:இன்று நடக்கும் பள்ளி மேலாண்மை குழுவுக்கான ஆன்லைன் பயிற்சியில், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்க உத்தரவிடப்பட்டுள்ளது.ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில், அரசுப்பள்ளிகளுக்கு வழங்கப்படும் நிதி, முறையாக செலவிடப்படுவதை கண்காணிக்க, பள்ளி மேலாண்மை குழு உருவாக்கப்பட்டுள்ளது.பெற்றோரை தலைவராக கொண்ட இக்குழுவில், பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் உறுப்பினர்களாக இருப்பர். அரசின் நிதி சார்ந்த திட்டங்களில் பங்கேற்பது, நிதியை கையாளும் விதம், அறிக்கை தயாரித்தல், பெற்றோருடன் இணைந்து பள்ளியின் வளர்ச்சியை உறுதி செய்வது குறித்து, குழுவினருக்கு ஆண்டுதோறும் பயிற்சி வழங்கப்படுகிறது.கொரோனா தொற்று காரணமாக, தற்போது ஆசிரியர்களுக்கான அனைத்து வகை பயிற்சிகளும் ஆன்லைன் மூலம் வழங்கப்படுகிறது. தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவில் உறுப்பினராக உள்ள ஆசிரியருக்கான பயிற்சி, 'தீக் ஷா' செயலி மூலம் இன்று நடக்கிறது.இப்பயிற்சியில் பங்கேற்க தவறும் பட்சத்தில், வரும் 31ம் தேதியில் நடக்கும், அடுத்தகட்ட பயிற்சியில், கட்டாயம் பங்கேற்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் வருகைப்பதிவு கண்காணிக்கப்படும் என, பள்ளிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE